சனி, 21 ஜனவரி, 2012

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: மிஸ்டர் மெட்ராஸ்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: வித்யாசாகர்
நடிப்பு: பிரபு, சுகன்யா

பல்லவி

பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம்
காதோடு ஏதோ கூறாமல் கூறும்.
உச்சிவானமெங்கும் ஒடுகின்ற மேகம்
கிட்ட வந்து என்னைத் தொட்டுவிட்டுப் போகும்.- பூங்காற்று

சரணம் 1

கோலமிட்ட வீடு என்றும் கோயில் என்றாகும்
கோயில் தன்னை நாடிவந்தால் வாழ்க்கை நன்றாகும்.
வேலைவாய்ப்பொன்று தேடினேன். தேடி நாள்தோறும் ஓடினேன்
தெய்வம் என்பாடு பார்த்தது - இங்கு எனைக் கொண்டு சேர்த்தது.
வேதனை யாவும் சோதனை யாவும் நேற்றுடன் தீர்ந்தது - பூங்காற்று

சரணம் 2

நானும் இந்த வீட்டைச் சேர்ந்த ஜீவன் என்றானேன்.
இங்கே உள்ள யாவரோடும் நானும் ஒன்றானேன்
வீட்டின் சந்தோஷம் பொங்கவே பாட்டு எந்நாளும் பாடுவேன்
அன்பு பாராட்டும் யாருக்கும் நன்றி என்பாட்டில் கூறுவேன்.
பூமியில் நானும் நேரினில் காணும் சொர்கமே வீடுதான் - பூங்காற்று

0 Comments: