சனி, 21 ஜனவரி, 2012

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: மறுபடியும்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
இயக்கம்: பாலு மகேந்திரா
நடிப்பு: ரேவதி, அரவிந்தசாமி

பல்லவி

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் - தமிழ்
கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன்மீது பண் பாடும் - நலம்

சரணம் 1

மனிதர்கள் சில நேரம் நிறமாறலாம்.
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம் - எழுதிய
அன்பு இலக்கியம் தவறாகலாம்.
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே - நலம்

சரணம் 2

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது
எழுவதும் பின்பு விழுவதும் இயல்பானது.
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன் - நலம்

0 Comments: