திங்கள், 3 ஜூலை, 2017

தாயை விற்று விட்டு திண்டாடுகிறது தமிழினம் - சீற்றப்பா 1

பணம் வாங்கி வாக்களித்து விட்டதால், அமைச்சரின் அல்லது அமைச்சரின் அல்லக்கையின் சட்டையைக் கூட பிடித்து கேட்க முடியாத நிலையில் இருக்கிறது இன்றைய தமிழகம். உங்கள் பகுதியில், நீங்கள் வேண்டுமானால் பணம் வாங்காமல் வாக்களித்திருக்கலாம். ஆனால் அனைவரும் பணம் வாங்காமல் வாக்களித்தனர் என்று மார்தட்ட முடியுமா? என் பகுதியில் என் குடும்பத்தார் பணம் வாங்கவில்லை. ஆனால் என் தெருவில்லுள்ளோர் பிச்சைக்காரர்கள் போல் சென்று பணம் வாங்கினர். என் அம்மா, குடும்பத்தார் வாங்காத பணத்தையும் சேர்த்து வாங்கித் தின்றனர். இப்போது திண்டாடுகின்றனர்.
உங்கள் வாக்கை விற்பது உங்கள் தாயை விற்பதற்கு நிகர். உங்கள் மனைவியை அல்லது குடும்பத்தை அல்ல. தாயை விற்பதற்கு நிகர். தாயை விற்றுத் தண்ணீர் குடித்துவிட்டு, "அங்கே தொட்டால் அழுக்கு. இங்கே தொட்டால் இழுக்கு." என்று போலித் தோற்றம் ஏன்? கூறு போட்டு விற்ற தமிழகத்தை மீட்க இனியேனும் விற்காமல் இருப்போமா? தமிழன்னையை அல்ல. விற்ற தம் அன்னையையாவது (வாக்கையாவது) மீட்டுக்கொள்வோமா?
வந்த விலைக்கு வாக்கை விற்று
தாயைத் தின்று தண்ணீர் குடித்து
கழுத்தில் வந்த கத்தி கண்டு
செய்வத றியாது செத்த தமிழனே.
- சீற்றப்பா 1
இன்று மரணப்பக்கியாய் இருக்கும் தமிழினம் மானம் கொண்டு மீண்டெழுமா?

0 Comments: