சனி, 13 மார்ச், 2010
எழுதிச் செல்லும் விதியின் கை எழுதியெழுதி மேற்செல்லும்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: சனி, மார்ச் 13, 2010 1 கருத்துரை
முழக்கங்கள்: தோன்றியது
வியாழன், 11 மார்ச், 2010
நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
இதை இக்காலச் சிறார்கள், நாய் வருகின்றது, கல்லை எடுத்தால் அது ஓடிவிடும். ஆகவே நாயைக் கண்டால் கல்லைக், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்பர்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: வியாழன், மார்ச் 11, 2010 0 கருத்துரை
முழக்கங்கள்: பழமொழி விளக்கம்
புதன், 10 மார்ச், 2010
அமிபா கதை
பழந்தாழியிலிருந்து
புதுக்குரல் ஒன்று கேட்டது
"நான் நான்" என்று.
பின்பு அஃதே
"நாம்" என்று எதிரொலித்தது நன்று.
முழங்கியவர்: PNA Prasanna மணி: புதன், மார்ச் 10, 2010 0 கருத்துரை
முழக்கங்கள்: கவிதைகள்
வியாழன், 4 மார்ச், 2010
நான்
அவரைப் பற்றித்தான் பேசுகிறார்களாம் - ஆனால்
அவருக்குத் தெரியவில்லையாம் - அவர்
குழந்தையா?
பிணமா? - இல்லை
அவர் கடவுள்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: வியாழன், மார்ச் 04, 2010 0 கருத்துரை
முழக்கங்கள்: கவிதைகள்
செவ்வாய், 2 மார்ச், 2010
நானின் தற்போதைய தருணம்.
தன்மையுடையவனாயிருந்தும்
முன்னிலையில் விளிக்காமல்
படர்க்கையில் விளிக்கிறார்கள் பலர்.
என் படர் கை பார்ப்பின்
முன்னிற்காமல்
தன்மையடைவர் சிலர்.
தமிழிலக்கணப்படி
"நான்" தன்மையே.
அது படர்க்கையானது பெருவியப்பே.
தன்மையினை படர்க்கையாய்
விளித்தமையால்
தன்மையா?
முன்னிலையா?
படர்க்கையா?
என விழிக்கிறது நான்.
"நாம்" என்பதே "நான்" ஆகிய பிறகு,
நானை, "நாம்" என்று விளிப்பதே தகும்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், மார்ச் 02, 2010 3 கருத்துரை
முழக்கங்கள்: கவிதைகள்