செவ்வாய், 2 மார்ச், 2010

நானின் தற்போதைய தருணம்.

தன்மையுடையவனாயிருந்தும்
முன்னிலையில் விளிக்காமல்
படர்க்கையில்  விளிக்கிறார்கள் ப‌லர்.

என் படர் கை பார்ப்பின்
முன்னிற்காமல்
தன்மையடைவர் சிலர்.

தமிழிலக்கணப்படி
"நான்" தன்மையே.
அது படர்க்கையானது பெருவியப்பே.

தன்மையினை படர்க்கையாய்
விளித்தமையால்

தன்மையா?
முன்னிலையா?
படர்க்கையா?
என விழிக்கிறது நான்.

"நாம்" என்பதே "நான்" ஆகிய பிறகு,
நானை, "நாம்" என்று விளிப்பதே தகும்.

3 Comments:

சி. கருணாகரசு said...

கவிதை வித்தியாசமாக இருக்குங்க பாராட்டுக்கள்.

தமிழ்தோட்டம் said...

அருமை, வாழ்த்துக்கள்

தங்க முகுந்தன் said...

என் எனது எல்லாம் போய் இப்போ நானை நானுக்கா?

உன் போய் நீயை.....

ஒளவையும் - திருவள்ளுவரும் - அகத்தியரும் வளர்த்த தமிழை!

ஐயோ ஏன் இப்படி?