செவ்வாய், 3 டிசம்பர், 2013
நிலைமை
முழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், டிசம்பர் 03, 2013 0 கருத்துரை
முழக்கங்கள்: கவிதைகள்
எங்கே மனதில் பயமின்றி... - இரவீந்தரநாத் தாகூர் கவிதை தமிழில்
முழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், டிசம்பர் 03, 2013 0 கருத்துரை
முழக்கங்கள்: கவிதைகள்
கவிச்சோலை
முழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், டிசம்பர் 03, 2013 0 கருத்துரை
முழக்கங்கள்: கவிதைகள்
திங்கள், 28 அக்டோபர், 2013
எங்கோ எதிலோ படித்தது
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை,
இன்னும் உறங்கும் நண்பன்,
சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,
இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,
விரும்பிய இசைபாடும் குறுவட்டு,
சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,
இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,
எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,
இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,
இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,
நாளைய காலையின் விழிப்பிலாவது
தாயின் , "மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு" எனும் குரல் கேட்காதா
என்ற எதிர்பார்ப்போடு.....
இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,
மென்பொருள் வல்லுனன்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: திங்கள், அக்டோபர் 28, 2013 0 கருத்துரை
முழக்கங்கள்: கவிதைகள்
செவ்வாய், 17 செப்டம்பர், 2013
மாதா உன் கோவிலில் - என்னைக் கவர்ந்த பாடல்
முழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், செப்டம்பர் 17, 2013 0 கருத்துரை
முழக்கங்கள்: என்னைக் கவர்ந்த பாடல்
ஞாயிறு, 8 செப்டம்பர், 2013
சாலமன் பாப்பையா - லியோனி ஓர் ஒப்பீடு
முழங்கியவர்: PNA Prasanna மணி: ஞாயிறு, செப்டம்பர் 08, 2013 2 கருத்துரை
முழக்கங்கள்: இன்னபிற
நல்(ள்ளி)லிரவு
நன்கு தொலைந்தவுடன்
படிக்கத் தொடங்கினேன்
பழைய பனுவலை.
பனுவல் படித்தால்
படுத்தவுடன் வருமாம்
தூக்கம்.
சொன்னதும் ஒரு பனுவல்தான்
இணையமல்ல.
தூக்கம் வந்ததோ இல்லையோ
வந்தது முத்தாய்ப்பற்ற
இந்த ஆக்கம்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: ஞாயிறு, செப்டம்பர் 08, 2013 0 கருத்துரை
முழக்கங்கள்: கவிதைகள்
செவ்வாய், 23 ஏப்ரல், 2013
பூசணிக்காய்க் கணக்கு - தமிழர் என்பதில் பெருமிதங்கொள்வோம்.
பூசணிக்காயில் உள்ள விதைகளின் எண்ணிக்கையை கூற முடியுமா என்று கேட்டால், தேவையில்லாத வெட்டி வேலை என்று சொல்வோம். ஆனால் அந்தப் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்று சொல்ல முடியும் என்றால் அதெப்படி என்று நம் புருவங்கள் உயர்வதைத் தவிர்க்க முடியாது.
அதைச் சொல்கிறது ஒரு செய்யுள். கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் ஒரு தமிழ்க் கணித நூல் எழுதியுள்ளார். அதன் பெயர் கணக்கதிகாரம்.
"கீற்றெண்ணி முத்தித்துக் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்திலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்" இது தான் அந்தக்கணக்கு.
ஒரு பூசணிக்காயின் கீற்றுக்களை எண்ணிக்கொண்டு அதை மூன்று ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையைப் பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கை என்பது இந்தப் பாடலின் பொருள்.
சரி அதைக் கணக்கு மூலமே பார்ப்போம்.
ஒரு பூசணிக்காயில் உள்ள கீற்றுக்களின் எண்ணிக்கை 5 என வைத்துக்கொள்வோம். பாடலின் படி 3,6,5 ஆகியவற்றால் பெருக்கக் கிடைப்பது 450 ஆகும். அதைப்பாதியாக்கினால் 225 ஆகும். அதை மீண்டும் முன்றால் பெருக்கக் கிடைப்பது 675 ஆகும். இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லையாம். எங்கோ ஒரு மூலையில் கிடைத்த ஓலைச்சுவடியில் இந்தச் செய்யுள் கிடைத்துள்ளது. இதைப் போன்ற வேறு செய்யுள்கள் உள்ளனவா? என்று ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து தேடி வருகிறார்கள்
முழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், ஏப்ரல் 23, 2013 0 கருத்துரை
முழக்கங்கள்: கட்டுரைகள்
செவ்வாய், 22 ஜனவரி, 2013
எங்கேயோ எப்போதோ இணையிறக்கம் செய்த கவிதைகள்
முழங்கியவர்: PNA Prasanna மணி: செவ்வாய், ஜனவரி 22, 2013 0 கருத்துரை
முழக்கங்கள்: இன்னபிற
வியாழன், 17 ஜனவரி, 2013
இனியவை இருபது - இசைப்புயலின் தாய் மண்ணே வணக்கம்
14/01/2013 - பொங்கல் திருநாள்
8. வெண்ணிலவே...(மின்சாரக்கனவு) ஹரிஹரன், சின்மயி - ஹரிஹரன் சில தவறுகளுடன் இந்தப்பாடலைப் பாடினார்.
18. மூங்கில்...(கடல்) அபய், ஹரிணி (முழுப்பாடல்)
20. நெஞ்சுக்குள்ளே...(கடல்) ஷக்திஸ்ரீ கோபாலன் (முழுப்பாடல்)
இந்தப் பாடல் கூட மேடையில் பாட முடியுமா என என்னை எண்ணி வியக்க வைத்த பாடல்கள் பின்வருவன.
தீ..தீ.. (திருடா திருடா) - நிதி மோகன், இரஞ்சித் பரோட்(விஐபி இசையமைப்பாளர்)
புதிய மனிதா...(எந்திரன்) மனோ, அமீனா
இசைப்புயல் இது போன்ற நிகழ்ச்சிகளை சென்னையில் தொடர்ந்து செய்து வந்தால் என் போன்ற சுவைஞர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
முழங்கியவர்: PNA Prasanna மணி: வியாழன், ஜனவரி 17, 2013 0 கருத்துரை
முழக்கங்கள்: திரைக் கட்டுரைகள்