வியாழன், 5 பிப்ரவரி, 2009

வலைப்பூவினை மெருகூட்ட‌


உங்கள் வலைப்பூவில்1 இப்பொழுது ஒலியினையும்2 பதிக்கலாம். இதற்காக தளம் ஒத்துழைக்கிறது. இதிலிருந்து குறிப்பிட்ட குறுநிரலை3 வெட்டி உங்கள் தளத்தில் ஒட்டினால் போதும். அது உங்கள் தளம் ஆங்கிலம் மற்றும் இசுபானிசு4 மொழியிலிருந்தால் அதைப்படிக்கும் ஒலிக்கோப்பினை உருவாக்கும். அதை நீங்கள் விரும்பினால் எம்.பி3 கோப்பாக இணையிறக்கம் செய்து கொள்ளலாம். நான் எனது ஆங்கிலத்தளங்களில்5 இதைச் சோதனை முயற்சிக்காகப் பொதிந்து வைத்துள்ளேன். நீங்களும் இது போன்று செய்து உங்கள் வலைப்பூவிற்கு மெருகூட்டலாமே!! இன்னும் இந்த வசதியானது தமிழ் மொழிக்கு வழங்கப்படவில்லை. இதற்கு http://www.vozme.com தளத்தினை அணுகவும். இதை எவ்வாறு பலவகைகளில் பயன்படுத்துவது என்பதைக்காண கீழ்க்காணும் தளம் சொடுக்கவும்.

http://vozme.com/webmasters.php?lang=en

1Blog

2Sound

3Java Script

4Spanish

3 Comments:

கடவுளன் said...

அருமையா இருக்குண்ணே இந்த பயன்பாடு. ஆனா... நீங்க பெண் கொரல வச்சுருக்கலாம். எல்லாமே ஆண்குரலா போச்சு.

வில்லன் said...

I really appreciate the writing. I saw this one just a day back in a computer magazine. But I did not include it in my blog. I'm sure I'll include it surely soon. I am sorry. I ll do Tamil next time.

P N A Prasanna said...

கருத்துரைகளுக்கு நன்றி. பெண்குரலை எதிர்காலத்தில் இட நேரலாம்.