செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

நான் கடவுள் இரண்டாம் பகுதிக்கு ஆயத்தம் - இயக்குனர் பேரரசு


கோடம்பாக்கத்தில் ஒருபடம் வெற்றி பெற்று விட்டால் போதும், அதே நடையில் கதை செய்து காசு பார்க்க நினைப்பார்கள். அவ்வகையில் அண்மையில் "வில்லு"வில் கையைச் சுட்டுக்கொண்ட கதையுடைத்தலைவனும், "திருவண்ணாமலை" சரிவர செல்லாததில் இயக்குனர் பேரரசுவும் இணைந்து நான் கடவுளை தலைகீழ் செய்து ஒரு கதை செய்ய நினைக்கிறார்கள். இது நகைச்சுவைக்காக பின்னப்பட்ட கற்பனையே. பிறர் சிந்தை நோகச் செய்ய அல்ல.

நான் கடவுள் படத்தின் கதையினைச் சுட்டு[1] தன் நடையில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார் பேரரசு. படத்தின் கதையுடைத்தலைவன்[2] அமர்ந்து இயக்குனரை கண்ணுங்கருத்துமாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

"தலைவரே இதுல அஞ்சு பாட்டு; எல்லாமே நான் தான் எழுதறேன். படத்துக்குப்பேரு வாரணாசி. சிவகாசி, திருப்பாச்சி வரிசையில இதுவும் கலக்கீடும்.”

"ஒங்களுக்கு இணையா[3] மூன்றெழுத்து நடிகை[4]யக் கேட்டிருக்கிறோம். இந்தப்படத்தோட முதல் பகுதி ஏற்கனவே எடுத்துட்டதால இத நாம நகைச்சுவையா பண்றோம்.”

"எடுத்த ஒடனே நீங்க ஒத்தக்கால்ல நடனம் ஆடுறீங்க. நீங்க மட்டும் தான் ஆடுறீங்க.

'நாந்தாண்டா கடவுள்

எல்லாமே பொதுவில்,

உருளுங்கடா தெருவில்'

அப்டீன்னு, எல்லாரும் தெருவுல உருள்றாங்க. நீங்க மிதிச்சு மிதிச்சு அருள் தர்றீங்க. எப்டீ?”

"ம். நல்லாயிருக்கு.", கதையுடைத்தலைவர் தலையசைக்கிறார்.

"இசை நம்ம இசையமைப்பாளர்[5]தான். அவரும் இசைக்கருவிகள் மேல் உருண்டே எல்லா இசையும் இந்தப் படத்துக்கு அமைக்கிறார்.”
"அப்றம், இந்தப்படத்துல நீங்க ஒப்பனையில்லாம நடிக்கிறீங்க. எல்லாரும் ஒங்களப்பாத்து மிரள்றாங்க. தாடி, மீசையெல்லாம் ஒட்டுத்தான். நீங்கதான் வேற மாதிரி செய்யமாட்டீங்கள்ல‌.”

"கதையெல்லாம் முதல் பகுதி நான் கடவுள் மாதிரிதான். ஒங்கப்பன் ஆத்தாவயெல்லாம் போட்டு அடியடின்னு அடிக்கிறீங்க. எடைல கெட்ட வார்த்த பேசுறீங்க. அதுவும் வடமொழில[6]தான். எல்லாத்துக்கும் நீங்க பயிற்சி எடுத்துட்டு வரணும்.” பேரரசு அள்ளி விடுகிறார்.

"இதெல்லாம் எனக்கு ஒத்து வருமா? எதாச்சும் குத்துப்பாட்டு இருக்கா?” கதையுடை கனைக்கிறது.

"உச்சக்காட்சில சண்டைக்கு மாறா நாம குத்துப்பாட்டு வைக்கிறோம். குருட்டுப்பெண்ணான தலைவிக்கு நீங்க வாழ்வு தர்றீங்க. எதிர் நாயகனை ஒழிச்சுக்கட்டுறீங்க. அப்றம் ஒரு சாமியார் தலைவிக்கு பார்வை கொடுக்கறார். அப்றம் என்ன குத்துப்பாட்டுதான். வாரணாசிலயே எடுக்கறோம். அப்பப்ப சென்னயத் தொட்டுக்கறோம்."

"அந்த சாமியாரா நானே வர்றேன்; எம்பேரு மருதகாசி." பேரரசு தொடர்கிறார். "நீள நீளமா உரையாடல்[7] பேசப்போறேன்."

குத்துப்பாட்ட மறந்துட்டேனே.

"நீ கண்ணு கொடுத்த சாமி - ஒன்ன

கட்டிக்கிட்டேன் மாமி

ஒன்னோட எதயம் காமி - அதுல

நான் மட்டுந்தான் சாமி”

"யோவ் புதுசா எதாச்சும் சொல்லுயா நானே வில்லு ஓடாத கடுப்புல இருக்கேன்." கதையுடை மீண்டும் கனைக்கிறது.

இதே மாதிரி கோப்பப்படுங்க. எடைல ஓம். ஸம்பவாமி.. அப்டீயிப்டீன்னு கெட்ட வார்த்தை பேசுங்க. படம் பிச்சிக்கும். பேரரசுவின் பிதற்றல் தொடர்ந்தது.
"இதுல 'பிச்சைப்பாத்திரம் ஏந்திவந்தேன் ஐயனே...' பாட்ட நம்ம இசையமைப்பாளர் கலவை[8] செய்வார். அத வேண்ணா நீங்களே ஒங்க குரல்ல பாடுங்க.

"போடாங்... நீ இப்டீயே பேசிக்கிட்டு இருந்தேன்னா இந்தப்பாட்ட அப்றம் நம்ம தயாரிப்பாளர்தான் பாடணும்.” கோபமாகச் செல்கிறார் கதையுடை.
"அப்பாடா ஒரு வழியா நம்ம தலைவர படத்தோட பாத்திரத்துக்கு ஏத்த மாதிரி மாத்திட்டேன்.” பேரரசு பெருமூச்சு விடுகிறார்.[1] வட்டார வழக்கு, திருடுதல் என்பது பொருள்

[2] விஜய்தான் வேறுயார்?

[3] Pair

[4] த்ரிஷா

[5] இற்றீகாந்த் தேவா

[6] சமற்கிருதம்

[7] Dialouge

[8] re- mix


8 Comments:

கல்லுளி மங்கன் said...

அருமையான பதிவு;
நானே இது மாதிரி ஒன்னு எழுதலாமின்னு
நெனச்சேன். நீங்க எழுதீட்டீங்க.

வில்லன் said...

யப்பா எப்படிங்க‌
இப்படியெல்லாம்
சிந்திக்கறீங்க?

P N A Prasanna said...

அன்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி

கடவுளன் said...

நான் கருத்து சொல்றதுக்கு
முன்னாடியே
கெளம்பீட்டாங்களா??
//
'நாந்தாண்டா கடவுள்

எல்லாமே பொதுவில்,

உருளுங்கடா தெருவில்' //
அருமையான பாட்டுங்க‌.

பெயரில்லா said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

SurveySan said...

உங்க paragraph formatting மாத்துங்க சாரே.
படிக்க கஷ்டமா இருக்கு.

Nandhan Sp said...

சூடான இடுகைல வந்துடுச்சி போல... வாழ்த்துக்கள் ...

P N A Prasanna said...

இந்த அமைப்பு ஃபயர்ஃபாக்ஸ், குரோம்
உலாவிகளுக்காக அமைக்கப்பட்டது.
1024 X 768 ல் வைத்து பார்க்க உகந்தது.
அடுத்த பதிவுகளை சரிவர அமைக்கிறேன்.
நன்றி.