சனி, 8 நவம்பர், 2008

நினைவலைகள்

வரு(று)த்த மீன்
உணவகம் சென்றிருந்தேன். வருத்த மீன் என்றிருந்தது அறிவிப்புப் பலகை. பிழையைச் சுட்டிக்காட்டினேன். வறுக்கும் பொழுது அந்த மீன் எவ்வளவு வருத்தப்பட்டிருக்கும் என்றான் சிறுவன். (குறும்பு பிடித்த ஆளப்பா...)
வறுத்த மீன் - வறுக்கப்பட்ட மீன். வருந்த மீன் - வருத்தம் ‍(கவலை)
--------
நான் தள்ளாதவன்
ஒருமுறை கி.வா.ஜ பேருந்து பயணம் மேற்கொண்டிருந்தார். பேருந்து திடீரென்று பழுதாகவும், பெரும்பாலானோர் எழுந்து பேருந்தைத் தள்ளலானார்கள். ஆனால் கி.வா.ஜ தள்ளவில்லை. பழுது சரியான பின்பு ஒருவர் வந்து "நீங்கள் தள்ளவில்லையா?" எனக் கேட்டார். கி.வா.ஜ சொன்னார்."நான் தள்ளாதவன்." அப்போது அவருக்கு அகவை எண்பது.
--------
ஆட்டுப்பால் குடித்தால் அறிவழிந்து விடுமா?
கிழக்குச் சீமையிலே வந்த நேரம். அதில் வரும் மானூத்து மந்தையிலே பாடலில் ஆட்டுப்பால் குடிச்சா அழிவறிஞ்சு போகுமுன்னு... என்றொரு வரி வரும். காந்தியடிகள் ஆட்டுப்பால் குடித்தவராயிற்றே!! என்ற கேள்வி வந்தது. வைரமுத்து அச்சமுற்று இதை நான் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை. இதை இத்துடன் விட்டுவிடுகிறேன் என்றார். இல்லேயேல் இப்பாடல் மேலும் பெரும் புகழடைந்திருக்கும்.

0 Comments: