ஞாயிறு, 16 நவம்பர், 2008

காதலில் விழுந்தேன்

காதலில் விழுந்தேன் படம் பார்த்தேன். சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஆங்கிலப்படத்தின் தழுவல். குறைந்த முதலீட்டுப்படம். நிறைந்த சன் தொலைக்காட்சி விளம்பரம். இடைவேளைக்குப்பின் சிறப்பான பைத்தியகாரத்தனமாக மாறுகிறது. கதையில் நாயகனுக்கும் கிறுக்கோ இல்லையோ. நமக்கு சற்று பிடிக்கிறது.
---
நாயகன் நன்றாக நடனமாடுகிறார். சண்டை போடுகிறார்.நடிப்பில் சற்றே விக்ரம் தெரிகிறார். மாற்றிக்கொண்டால் ஒரு சுற்று வரலாம். நாயகி பின்னணிக்குரல் கலைஞர் மகாலட்சுமி குரலில் தமிழ் பேசுகிறார். மற்றபடி சரி என்றே சொல்ல வேண்டும். படத்தை எப்படியெல்லாம் காகக வேண்டுமோ என்றெண்ணி பார்க்கிறார்கள். எப்படியாவது திருட்டு குறுவட்டு சந்தையில் வந்து விடுகிறது.
---
லிவிங்க்ஸ்டன், நாயகன், நாயகி, 'பசி' சத்யா, கிரேஸி நாடகக்குழுவில் வரும் சிரிப்பு நடிகர் தவிர வேறு யாருமே தெரியவில்லை. எல்லாம் துணைநடிகர்கள். பேருந்து காட்டுகிறார்கள். தொடர்வண்டி காட்டுகிறார்கள்.எல்லாவற்றிலும் கூட்டமே இல்லை. குறைந்த முதலீட்டில் வந்த இப்படம் சன் தொலைக்காட்சி விளம்பரம் இல்லையெனில் காணமலே போயிருக்கும் என்பதில் ஐயமில்லை.
---
இசை விஜய் ஆன்ட்னி. கலக்குகிறார். குத்துப்பாட்டிலும் சரி, மெல்லிசையிலும் சரி நல்ல முதிர்ச்சி தெரிகிறது. பின்னணி இசையிலும் நல்ல மெருகு. காதலில் விழுந்தேன். தமிழ் திரைப்படத்தில் அடுத்து ஒரு காதல்படம். வேறொன்றும் சொல்வதற்கில்லை.
---
"இப்படியெல்லாம் படமெடுக்கறது எதுக்குங்கறீங்க? இருக்கவனுகள கெளப்பிவிடதுக்குத்தான்." என்று கடைக்கோடி சுவைஞர்கள் கூறுவதை படத்தின் இயக்குநர் கவனிக்க வேண்டுகிறோம்.
---
கமல்ஹாசன் படம் பார்த்திருந்தால் ஓ ஒரு வேளை குணா படத்தினை இப்படி எடுத்திருந்தால் வெற்றிபெற்றிருக்கும் என்று நினைத்திருப்பாரோ என்னவோ!!!

2 Comments:

கடவுளன் said...

கமல்ஹாசன் காதல் கொண்டேன் படம் பார்த்த பொழுதும் இப்படித்தான் நினைத்திருப்பார்.
ம்... அட்ரா.. அட்ரா... நாக்கு மூக்க...

அறிவு said...

அப்றம் அந்த ஒரு ஆங்கில பாட்ட சுட்டு போட்டிருக்கார்ல, அத சொல்லலியே. நா.. மின்னஞ்சல் அனுப்றேன். அப்றமா அதப்பத்தி ஒரு திறனாய்வு செய்யலாம்.