சனி, 22 நவம்பர், 2008

இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அழைப்பு

இந்திய .டி. நிறுவனங்களுக்கு ஆஸ்திரேலிய அழைப்பு
வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2008  

    


சென்னை: இந்திய ஐடி துறையை அமெரிக்கா கைவிட்டாலும் மற்ற உலக நாடுகள் தொடர்ந்து ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன.


குறிப்பாக ஆஸ்திரேலியா, தங்கள் நாட்டுக்கு ஐடி தொழில்நுட்ப நிபுணர்களை அதிகம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

சமீபத்திய பொருளாதார தேக்க நிலையால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்திய பீபிஓ துறையுடனான தங்கள் வர்த்தகத் தொடர்புகளை நிறுத்திக் கொண்டுள்ளன. இதனால் பல நிறுவனங்களின் வருவாயும், லாபமும்  வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுநாள் வரை, அமெரிக்காவுக்கே அதிக அளவில் சேவைகளை வழங்கி வந்தன. இப்போது அமெரிக்காவே ஆட்டங்கண்டு விட்டதால், இந்த வருவாய் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இச்சூழ்நிலையில்இந்திய ஐடி நிபுணர்கள் மற்றும் இடைநிலை ஊழியர்களுக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக பீபிஓக்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கத் தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சர்வதேச பொருளாதார தேக்க நிலை, ஆஸ்திரேலியாவை அதிகம் பாதிக்கவில்லை அந் நாட்டின் பல்வேறு துறைகளின் தொழில்நுட்ப தீர்வுகளுக்கு இந்திய நிறுவனங்கள் சேவைதான் இப்போது அதிகம் தேவைப்படுகிறது.

இதற்கு முன்பும்கூட அதிக ஐடி வல்லுநர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் தேவைப்பட்டார்கள். ஆனால் அப்போது இந்திய ஐடி நிறுனங்கள் அமெரிக்கா-ஐரோப்பாவுக்கே முன்னுரிமை அளித்து வந்தன.

'
ஆஸ்திரேலியாவின் பீபிஓ துறையின் சந்தை மதிப்பு 400 கோடி டாலர். அங்கு, தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இப்போதும் பற்றாக்குறை உள்ளது. இந்திய நிபுணர்களுக்குத் தரும் தொகையை விட, ஆஸ்திரலிய நிபுணர்களுக்கு பல மடங்கு சம்பளம் தரவேண்டும் என்பதால், ஆஸ்திரேலிய நிபுணர்களின் முதல் சாய்ஸ் இந்தியாவாக உள்ளது' என்கிறார் இந்தோ-ஆஸ்திரேலிய வர்த்தக சபைத் தலைவர் சரத்சந்திரன்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு தகவல் தொழில்நுட்பச் சேவை அளிக்க இந்தியாவில் உள்ள பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளன. குறிப்பாக, சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பீ.பி.. பிரிவான சுந்தரம் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம், ஆஸ்திரேலிய நாட்டு நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பத் தீர்வுகளை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 10 சதவீதம் ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்படுவது குறிப்படத்தக்கது.

0 Comments: