புதன், 12 நவம்பர், 2008

என்னைக் கவர்ந்த பாடல்

படம்: என்றும் அன்புடன்
பாடல்: வாலி
இசை: இளையராஜா 
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் 
இயக்குநர்: பாக்யநாதன் 
நடிகர்கள்: முரளி, சித்தாரா, மனோரமா

பல்லவி

துள்ளித் திரிந்ததொரு காலம்
பள்ளிப்பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே 
இன்பத்தைத் தேடுது பூங்கொடியே பூங்கொடியே _ துள்ளித்  

சரணம் 1 
அன்னை மடியினில் சிலநாள்
அதைவிடுத்தொரு சிலநாள்
திண்ணை வெளியினில் சிலநாள்
உண்ண வழியின்றிச் சிலநாள்
நட்பின் அரட்டைகள் சிலநாள்
நம்பித் திரிந்ததும் பலநாள்
கானல் நீரிலும் சிலநாள்
கடல் நடுவிலும் சிலநாள்
கன்னி மயக்கத்தில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே... _ துள்ளித்

சரணம் 2
துள்ளும் அலையென அலைந்தேன்
இன்பம் எல்லையென வளர்ந்தேன்
வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தேன்
வானம் எல்லையென வளர்ந்தேன்
காதல் வேள்விதனில் விழுந்தேன் 
கேள்விக்குறியென வளைந்தேன்
உனை நினைத்திங்கு சிரித்தேன்
உண்மைக் கதைதனை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன் 
சொல்லமொழியின்றித் தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம் நீர்க்குமிழ் போன்றது பூங்கொடியே..._ துள்ளித்

0 Comments: