சனி, 15 நவம்பர், 2008

அன்புத்தம்பி அறிவு


எனக்கும் திருமணம்.

என் தம்பி அறிவு. பெயருக்கேற்றாற் போன்று அறிவானவன். எனது திருமண உடையினை அணிந்து கொண்டு இருப்பதைப் பார்த்தால், அவனக்கு திருமண ஆசை முளைத்து விட்டது போல தோன்றுகிறதா?

அவன் விடுமுறையாயிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை எம் ஜெயசீலன் இல்லத்தில் எடுத்த ஒளிபடம் தான் இது. படமெடுத்தவர் யார்? எங்கள் அம்மா..

என் தம்பி எனது நலம் விரும்பி. சிறுவனாயிருந்த போது அவனக்கு வலைப்பதிவு நிரல்களைச் சொல்லிக் கொடுத்தேன். உடனே என்னைப் பற்றி அவன் ஒரு வலைப்பக்கத்தினைச் செதுக்கிவிட்டான். இது அவனுக்காக நான் செய்யும் வலைப்பதிவு. அன்புத்தம்பி அறிவு நீ என்றும் நன்றாயிருக்க அண்ணனின் வாழ்த்துக்கள்.
கூகுளில் என்பெயர் வருவது கண்டு அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தம்பி என் பெயர் வருகின்ற போது என் நலம் விரும்பி உன் பெயர் வராதா? வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? நான் உன் படத்தினை என் வலைப்பதிவில் பதிகிறேன் மகிழ்வோடு...