மாலை உலா
புது வேலைக்குச் சென்ற பிறகு கிடைத்த மாலை வேளையில் மனைவியுடன் பாட்டுக்கச்சேரிக்குச் சென்றேன். ஆனால் அது ஆடலும் பாடலுமாம். (இப்போதெல்லாம் அப்படித்தான் அழைக்கிறார்கள்.) திருவிழா என்றாலே இப்படியெல்லாம் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது அல்லவா. இதில் வரும் கன்னட பாடல்களை விட நடனங்களே மிகவும் சுவைக்கப்படுகின்றன. என் மனைவியும் கூட "அடுத்து பாடினா வீட்டுக்குப் போகலாம்;ஆடினா பார்க்கலாம்." என்றுதான் சொன்னாள்.
இது கன்னடர்கள் திருவிழாவாதலால் கன்னட ஆடலும் பாடலும் பார்த்தோம். இந்த புதுயுகத்தில் இதெல்லாம் பார்ப்பவர்கள் குறைவு என்பது கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தே அறிந்து கொண்டேன்.
"ஜிங்கமெரினா" இப்படித்தான் உச்சரிக்கிறார்கள். இதுதான் இப்போழுது இங்கு முதன்மைப்பாடல். இதற்கு நடனமாடிய இளைஞர் நன்கு உடல் வளைத்து ஆடியதை அனைவரும் சுவைத்தனர். நமது தமிழ்ப்பாடல்களைச் சுட்டு சில பாடல்கள் போட்டார்கள். ஒரு மாலைப் பொழுதை சற்றே இனிமையாகக் கழித்த மகிழ்வில் நானும் மனைவியும் வீடு திரும்பினோம்.