சனி, 20 டிசம்பர், 2008

நான் கடவுள் வருகிறதாம் - நம்புவோம்.

இதோ வரும் அதோ வரும் என்று எதிர் பார்க்கப்பட்ட "நான் கடவுள்" பொங்கலுக்கு வரப்போகிறதாம். (நம்புவோம்.) ஆரியா குரல்1 கொடுத்து விட்டாராம். தொடுதல் வேலைகள்2 இன்னும் இருக்கின்றனவாம். படம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனாலும் இன்னுமும் வேலைகள் மெதுவாகத்தான் இருக்கின்றன. முதலில் அஜித், மீரா ஜாஸ்மின் நடித்தார்கள்.

--------
அஜித்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீக்கப்பட்டார். அவரிடமிருந்து கொடுத்த முன்பணம்3 சண்டையிட்டுப் பிடுங்கப்பட்டது. அதற்குப்பின் அவர் நடித்த பல படங்கள் வெளியாகி விட்டன. பிறகு ஆரியா வந்தார். நாயகிகள் பாவனா,கார்த்திகா என்று பலர் மாறினர். பின்பு பூஜா ஆரியா மேல் கொண்ட அன்பால் இப்படத்தை ஏற்றுக் கொண்டார். அவர் பிச்சைக்கார பெண்ணாக நடிக்கிறார்.

--------

ஏறக்குறைய கலைஞர்கள் நிறையவே மாறிவிட்டார்கள். பாலாவிற்கு இது நான்காம் படம். இப்படத்திற்கு அவர் நாயகனின் பெயர் வைக்கவில்லை. (முந்தைய படங்களின் தலைப்பும் நாயகனின் பெயரும் ஒன்றே என்றறிக. சேது, நந்தா. பிதாமகன் விதிவிலக்கு.)

பாலாவைத் தூக்கி வைத்தாடும் குழுவே இப்படத்தில் வேலை செய்கிறது. எடுத்துக்காட்டு துணை இயக்குநர் சிங்கப்புலி.

--------

சன் தொலைக்காட்சியின் ஆதரவினை பிதாமகன் வெளிவந்த நேரத்திற்கு சற்று பின்னால் இழந்தவர் பாலா. ஆக இப்படத்திற்கு அதன் ஆதரவும் இருக்காது. எனவே அதன் போட்டி அலைவரிசைகள்4 இப்படத்தின் பின்னால் ஓடுவர் என்பது திண்ணம். எது எப்படியோ தயாரிப்பாளரும், சுவைஞர்களும்5 தப்புவார்களா? இல்லையேல் பைத்தியம் பிடித்து ஐயோ கடவுளே என்பார்களா? "நான் கடவுள்" வெளியானால்தான் விடை கிடைக்கும். ஐந்து ஆண்டுகள் எடுக்கும் அளவுக்கு அப்படியென்ன இது "தசாவதாரத்தை" விட பெரிய படமா? பாலாதான் விடை சொல்ல வேண்டும். சொல்வாரா?

1Dubbing

2Touch-up

3Advance

4Channels

5Fans

பதிவிறக்கிப்படிக்க கீழே சொடுக்கவும்.

http://pnaprasanna.blog.co.in/files/2008/12/naan-kadavul.pdf

1 Comment:

பெயரில்லா said...

அப்பாடா கடைசியா பாலா வந்துட்டாரு. விழி பிதுங்க வச்சவரு வந்துட்டாரு