திங்கள், 22 டிசம்பர், 2008

பாராட்டும் பொன்மனம்

பாராட்டும் பொன்மனம்.

நண்பர் இறீ கலியாண இராமன்1 (கடைசியாக நண்பர் பெயரை தமிழில் பெய்தாகி விட்டோம்.) ஏரிகளின் நாட்டிலிருந்து2 மென் தொலைபேசினார்3 எளிமையாக; அருமையாக. எனது வலைப்பூக்களைப்4 பற்றியும் பேச்செழுந்தது. வலைத் தோட்டத்தைப் பாராட்டினார். இது போன்று தொலைவிலுள்ள நண்பர்கள் பேசும் பொழுது உள்ளம் புளகாங்கிதம்5 அடைகிறது. (இதைப் படித்தால் கூட புளகாங்கிதம் என்பது பெரிய வார்த்தை என்பார் முற்சொன்னவர்.)பாராட்டியதோடன்றி தொடர்ந்து மின்னஞ்சலும், கருத்துரைகளும் கொண்டு எம் புகழை அள்ளித் தெளிக்கிறார். எம் புகழ் என்பது எம‌க்கு மட்டுமல்ல, எம்மைச் சார்ந்தவர்களுக்கும், எம்மைக் கொணர்ந்த தமிழுக்கும் உரியதாகவே கருதுகிறோம்.

இது போன்ற புகழ்ச்சிகளைக் காணும் பொழுது புளகாங்கிதம் என்பதுகூட‌ வெறும் வார்த்தைதான் என்றே எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை இவ்வார்த்தையால் நிறைவு செய்ய முடியாது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இவர் அனுப்பிய மின்னஞ்சல் பார்த்த எம் இளவல் அறிவு "அண்ணே!! ஒன்னயப்பத்தி இப்டி பாராட்டிப் பேசுறாறே.. அருமை." என்று கைபேசினார்6  இது போன்று பாராட்டும் பொன்மனம் உரியவருகளுக்கே வரும். இத்தகையோர் இருப்பின் அழகான எம்தமிழ் கொண்டு அறிவியல் நோக்கிப் பயணிக்கும் இவ்வுலகைக் கட்டியிழுப்போம். நன்றி நண்ப. உம் பாராட்டும் பொன்மனத்திற்கு நன்றி அன்ப. தொடர்ந்து கருத்துரைகள் இடுக. ஆதரவு தருக.

- பெருங்கோன்.பா.நி..பிரசன்னா.

1Sri Kalyana Raman

2Finland

3Talking through VOIP

4Blog

5Ecstacy

6Talking over the mobile

0 Comments: