செவ்வாய், 9 டிசம்பர், 2008

கூகுளில் சேர ஆயத்தமா!!

போகிற போக்கைப்பார்த்தால் கூகுள் பற்றி பள்ளிகளில் தனிப்பாடமே நடத்த வேண்டும் போலிருக்கிறது. அவ்வளவு செய்கிறார்கள். இணையத்தை தங்கள் கட்டுக்குள் வைத்து இருக்கிறார்கள். அவர்களது பக்க தர நிரல்கள் எல்லாம் பிய்த்து உதறுகின்றன. கைபேசி ஆன்ட்ராயிடில் தனியாக விளம்ப்ரங்கள் வர வைக்கிறார்கள். ஆன்ட்ராயிடின் மூலம், பழைய யுனிக்ஸ் என்கிறது கூகுள் வட்டாரம். எல்லா தனியார் நிறுவன ஊழியர்களும் கூகுளுக்கு செல்ல விரும்புகிறார்கள். அங்கு பல வசதிகள் உள்ளதே இதற்குக் காரணம். கூகுளுக்கு போக முடியாமல் அகவை முதிர்ந்துவிட்டவர்கள் "இவிங்க அடங்க மாட்டாய்ங்கப்பா.." என்கிறார்கள். அதற்குக் காரணம் எல்லாவற்றிலும் கூகுள் கால் பதிப்பதுதான். கூகுளுக்கு வேலைக்குச் சேர பத்துக் காரணங்களை ஆயத்தமாக வைத்திருக்க வேண்டும் இல்லையேல் வேலைக்குச் சேர்க்க மாட்டார்கள். என்ன நீங்கள் கூகுளில் சேர ஆயத்தமா அன்பர்களே!!

0 Comments: