வியாழன், 2 ஏப்ரல், 2015

சண்டமாருதம் - சிலவரிகள்

சண்டமாருதம் என்ற சமற்கிருதச் சொல்லுக்கு ஊழிப்பெருங்காற்று என்று பொருள். படத்தில் ஓவியா வழக்கம் போல் உமா மகேசுவரி இரவல் குரலில் பேசுகிறார். சிரிக்கிறார். பாட்டிற்கு வந்து ஆடுகிறார். மற்றபடி நடிப்பு, அதெல்லாம் யாரு கேட்டா? கதைத் தலைவன், எதிர் தலைவன் இரண்டுமே சரத்குமார்தான். எதிர் தலைவன் தான் நன்றாக நடித்திருக்கிறார். தம்பி இராமையா அவ்வப்போது வந்து கிச்சு கிச்சு மூட்டுகிறார். வழக்கம் போல் சமுத்ரகனி நன்றாக நடித்திருக்கிறார். படத்தில் மீரா நந்தனும் இருக்கிறார். இசை ஜேம்ஸ் வசந்தனாம். அவரது இசையமைப்பு வேலையில் இன்னுமொரு படம் சேர்ந்து விட்டது.
தனது மகளை விடச் சிறிய பெண்ணான ஓவியாவுடன் ஆட்டம் போட சரத்குமாருக்கு எப்படித்தான் மனம் வந்ததோ? ஓவியா(23), வரலட்சுமி சரத்குமார்(30), சரத்குமார்(60)
அவ்வளவுதான். வேறென்ன சொல்ல.

0 Comments: