வெள்ளி, 17 ஏப்ரல், 2015

கருநாடகாவில் தமிழகத்தை எதிர்த்து கடையடைப்பா?

சில நாட்களுக்கு முன்புதான் தமிழ் நாட்டிலே மேகேதாட்டில் அணைகட்டக்கூடாது என்பதற்காக கடையடைப்பு செய்தார்கள். நாளைக்கு 18/04/2015 கருநாடகாவில் கடையடைப்பு, வேலைநிறுத்தம் போன்றவைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இது தமிழர்கள் செய்த கடையடைப்பினை எதிர்த்தாம். நாட்டில் மக்களாட்சி என்பது, ஆசிரியர் வகுப்பில், "பேசுகிறவனைக் குட்டலாம், குட்டியவனைத் திரும்பக் குட்டலாம்." என்று சொல்வதைப் போல் ஆகி விட்டது. குறும்புக்கார மாணவர்கள் திரும்பத்திரும்பக் குட்டிக் கொண்டேயிருப்பார்கள். ஆசிரியர் வகுப்பில் நன்றாகத் தூங்கலாம். எல்லா அரசுகளும் தூங்கிக் கொண்டேயிருக்கின்றன. குறும்புக்காரர்கள் கடையடைப்புச் செய்கிறார்கள்.
என்ன ஒரு சாபக்கேடு. இதுதான் மக்களாட்சியா?

0 Comments: