வியாழன், 9 ஏப்ரல், 2015

எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவு

பன்முகத் திறமை இருப்பினும், எழுத்தாளர் என்னும் முகத்தாலேயே அதிகம் அறியப்பட்டவர். அகவை எண்பதிலும், எழுத்தாளருக்குரிய செருக்குடன் தன் கருத்தைத் தேங்காய் உடைத்தது போல் பேசுபவர். அதனாலேயே அவருக்கு எதிர் முகங்கள் அதிகம்.
"தமிழை விட சமற்கிருதம் தான் பழைய மொழி, தமிழன் எங்குமே தமிழ் பேச வேண்டும் என்று தமிழனே கூறுவது, நாய் தன்னையே நக்குவது போன்றது." என்பன போன்ற தேங்காய்களை உடைத்தவர்.
"நீ சமற்கிருத்தில் எழுத வேண்டியது தானே, தமிழனை நாய் என்று செப்பாதே," என்று சவுக்கடி கிடைத்ததும், நாய் என்பதற்கு மாற்றாக சிங்கம் என்று போட்டுக் கொள்ளவும் என்று செருக்குக் காத்தவர். எனினும் தமிழ் எழுத்திற்கு அவர் செய்திருப்பது பெரும் பணி. அவரது மறைவிற்கு வருந்துகிறோம்.

0 Comments: