செவ்வாய், 6 ஜனவரி, 2009

நான் கடவுள் - திரைப்பாடல் திறனாய்வு

நான் கடவுள் - திரைப்பாடல் திறனாய்வு:

ஆறு பாடல்கள். வார்த்தைகள் புரியாத இக்காலப்பாடல்களுக்கு இடையில் நன்கு புரியும் பாடல்கள். வாழ்த்துக்கள் இசைஞானியாரே.

1. அம்மா உன் பிள்ளை நான்... என்று தொடங்கும் பாடல் பல்லாண்டுகளுக்கு முன் வந்த அச்சாணி1 - மாதா உன் கோயிலில்... பாடலின் மெட்டு. பின்னணி இசையில் மாற்றங்கள் செய்துள்ளார் இசைஞானி. அதிகம் தமிழ்க்கொலை செய்யாமல் பாடியிருக்கிறார் சாதனா சர்கம்.

2. ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார் கண்ணில் பார்வை போன போதும்... பாடலை. இசையரசரின் நடையில் பாடல் இருக்கிறது. இழுவை இசைக்கருவி2 இழைந்தொலிப்பது பாடலுக்கு கூடுதல் நன்மை செய்கிறது.

3. மாதா உன் கோவிலில் பாடல் அதே வார்த்தைகளுடன் மீண்டும் செய்யப்பட்டிருக்கிறது. மதுமிதா பாடியிருக்கிறார். அண்மையில் அவர் பாடிய குத்துப்பாடல்களுக்கு3 இப்பாடலின் மூலம் பரிகாரம் தேடிக்கொண்டார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. இது சிறிய பாடல்தான். பழைய பாடகி4 பாடிய பாடலை நல்லவேளை கெடுக்கவில்லை. மகிழ்ச்சி.

4. ஓம் சிவ ஓம்... பாடலை குழுவினர் பாடியுள்ளனர். திருமொழிகள்5 இழைந்தொலிப்பதால் திரையில் மட்டுமே கேட்க இனிமையாக இருக்கும் என கருதுகிறேன். கேட்க கேட்க சிலருக்குப் பிடிக்கலாம். காட்சியில்லாமல் பாடல் மட்டும் கேட்பதால் சற்றே நெருடலாக இருக்கிறது.

5. ஒரு காற்றில் அலை... பாடல் கண்ணில் காட்சி... பாடல் மெட்டிலேயே அமைந்துள்ளது. இசையமைப்பாளர் பாடியுள்ளார். ஓரளவு சரியாகவே உள்ளது பாடல்.

6."பிச்சைப்பாதிரம்..." பாடல் பழைய இசையமைப்பாளர் விரும்பிகளுக்குப் பிடிக்கும். கருநாடக இசையடிப்படையில் அமைந்துள்ளது இக்காலப் பாடல்களுக்கு இடையில் புதுமையாக இருக்கிறது. மதுபால கிருஷ்ணன் பாடியிருக்கிறார்.

படத்தின் காட்சிகளையும், சுவரொட்டி காட்சிகளையும், பாடல்களையும் பார்க்கும் பொழுது. இந்நாளைய சுவைஞர்களை விடுத்து வேறு காலத்திற்கு கொண்டு செல்வது போன்று தெரிகிறது. பிச்சைக்காரர்களைச் சுற்றி நிகழ்கின்ற கதையாதலால் அதற்குப் பொருத்தமான பாடல்களைத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர். பொங்கல் வரைக்கும் பொறுப்போம். பின்னர் பார்ப்போம் என்ன நிகழ்கின்றதென்று.

கவிஞர் வாலி எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளார். காதை உறுத்தாத இசைக்காக இசையமைப்பாளரைப் பாராட்டலாம்.

இணையத்திலேயே இலவசமாகப் பாடல்கள் கிடைக்கின்றன. தரமும் நன்றாக இருக்கின்றது. பாடல்களைப் பதிவிறக்க‌ http://www.tamilbeat.com தளம் அணுகவும். எது எப்படியோ, பழைய பாடல்களைக் கேட்பது போன்ற உணர்வினைத் தடுக்க முடியவில்லை.

1திரைப்படத்தில் எஸ்.ஜானகி உருகிப்பாடும் பாடல் காலத்தால் அழிக்க முடியாதது.

2வயலின்

3ஐயா - சுத்திப்போட வேணுமையா..., சத்யம் - பால் பப்பாளி... போன்ற பாடல்கள்

4எஸ்.ஜானகி

5மந்திரங்கள்

பதிவிறக்கம் செய்ய‌: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/nk.pdf

12 Comments:

சரவணகுமரன் said...

//எது எப்படியோ, பழைய பாடல்களைக் கேட்பது போன்ற உணர்வினைத் தடுக்க முடியவில்லை.
//

ஆமாங்க...

பெயரில்லா said...

சரவணா குமரன் கூறியது சரியே

PNA Prasanna said...

கருத்துச் சொல்லிய நண்பர்களுக்கு நன்றி

Jeyapalan said...

பிச்சைப் பாத்திரம் - பாடல் இளைய ராஜா வின் பழைய தனி அல்பம் ஒன்றில் இருக்கும் பாடல்களில் ஒன்று. இந்த அல்பம் இளைய ராஜா வின் சிம்பொனி யை விட 100 மடங்கு சிறந்தது.

பெயரில்லா said...

நல்ல திறனாய்வு.......திரைப்படத்தை பார்க்கும்போது பாடல் ஒரு பொருட்டாகவே இருக்காது என நினைகிறேன்...... பதிவிர்ற்கு நன்றி.

PNA Prasanna said...

செயபால் தெரிவித்த கருத்துக்கு நன்றி. நான் இதுவரை இளையராஜாவின் சிம்போன்யை கேட்கவில்லை. அதற்கான தளம் எதுவும் இருந்தால் தெரிவிக்கவும்.

PNA Prasanna said...

கருத்துத் தெரிவித்த நண்பர் சவடவிற்கு நன்றி. எப்படியும் படம் பார்த்துவிட்டு திறனாய்வு செய்யத்தானே போறோம்.

Jeyapalan said...

ராஜாவின் "ரமண மாலை" என்பது அந்தத் தொகுப்பு. அத்தனை பாடல்களும் அருமை. சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் வெளி வந்தது.

http://www.youtube.com/watch?v=jZtQirb1yIU

http://www.casttv.com/search/tags:RAMANA/6#

Jeyapalan said...

சிம்பொனி எங்கே இருக்கு என்று தேடிப் பார்க்கிறேன்.

PNA Prasanna said...

செய்திகளுக்கு நன்றி அன்பரே.

தூயா (Thooya) said...

அருமை,உங்கள் தமிழ்ப்பற்றை நினைக்கும்பொழுது மெய்சிலிர்க்கிறது.வாழ்க உங்கள் பணி,வளர்க் உங்கள் புகழ்.இப்படிக்கு தூயா

தூயா (Thooya) said...

அருமை,உங்கள் தமிழ்ப்பற்றை நினைக்கும்பொழுது மெய்சிலிர்க்கிறது.வாழ்க உங்கள் பணி,வளர்க் உங்கள் புகழ்.இப்படிக்கு தூயா