சனி, 17 ஜனவரி, 2009

வடமொழி திரைப்படத் திறனாய்வுகள்

கஜினி: தமிழில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வந்து சக்கைப்போடு போட்ட அதே படம் தான். மறுபதிப்பு செய்திருக்கிறார் அதே இயக்குனர்1.
பெரும்பாலும் பிறழாமல் அதே சுவையோடு படம் கொடுத்திருக்கும் இயக்குனரைப் பாராட்டியே ஆக வேண்டும். உரையாடல்கள் முதற்கொண்டு அப்படியே வந்திருக்கிறது. வடமொழி நாயகன்2,தமிழ் நாயகனின்3 உடல்மொழிகளை4 அப்படியே செய்யாமல் தன் வழியில் செய்திருப்பது பாராட்டுக்குரியது. தமிழ் இயக்குனரை வடக்கே கொண்டாடுகிறார்கள். தமிழர்கள் சொக்காயினைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

இசைப்புயல்5 இசையில் பாடல்கள் அமர்க்களம். தமிழில் வரும் "ரங்கோலா..." பாடலுக்கு மாற்றாக வேறோரு பாடல் தருணம் படத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எல்லாம் சரிதான். படத்தின் முடிவில் சற்றே மெதுவாக மாறிவிடுவதுதான் வருத்தத்திற்குரியது. தமிழில் அதே விரைவோடு முடியும். எல்லாம் வடக்கித்தியற்களுக்கான வசதியே.

படம் வந்ததிலிருந்து நான்கு "6" க்களுக்கும் அதிகமாக தொலைபேசி வருகிறது என்று செய்தித்தாள் செய்தி. இந்த நாயகி7 இடத்தில் வேறொருவரை நினைத்துப்பார்க்க முடியவில்லை. அதே நேர்த்தி. அதே வனப்பு. நாயகி வடக்கே ஒரு சுற்று வருவாரென்பது திண்ணம். மணிரத்னத்திற்கு பிறகு வடக்கே ஏற்றுக்கொள்ளப்பட்ட இவ்வியக்குனருக்கு வாழ்த்துக்கள்.

1.ஆர்.முருகதாஸ்

2அமீர்கான்

3சூர்யா

4Body Languages

5.ஆர்.இரகுமான்.

6.ஆர்.முருகதாஸ், .ஆர்.இரகுமான், அசின், அமீர்கான்

7அசின்


ஒரு புதன்கிழமை (எ வெட்னஸ்டே)

ஒரு பொது மனிதன் எவ்வாறு அச்சுறுத்தற்காரனாகச் செயற்படுகிறான் என்பதை செவ்வனே விவரிக்கும் இப்படத்தில் பாடல்கள் கிடையா. நாயகன்1 தான் அச்சுறுத்தற்காரன். குண்டு வெடிப்புக்களைச் செய்ய வைக்கிறேன் என்று கூறிக்கொண்டு ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில் மேல் மாடியில் வெறுமையாக எல்லாவற்றயும் கையாள்வது திரையுலகிற்கு புதிது.

இவனைப்பிடிக்கவரும் காவலராக மற்றொருவர்2. அவருக்கும் இவருக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைதான் கதை.

நாயகன் நடிப்பில் வேறொரு பரிமாணம் காட்டுகிறார். நாயகி அல்லது துணைநாயகி என்று சொல்லலாம். அவரும் அசத்தியிருக்கிறார். எல்லாரும் நன்றாக நடிக்கின்றனர். படம் பார்க்கும் உணர்வே நமக்கின்றி அருமையான திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். செம்மையான படம்.

உலகநாயகனும்3, மலையாள நாயகனும்4 சேர்ந்து இப்படத்தில் மீண்டும் செய்ய இருப்பதாகச் செவிவழிச்செய்தி. நாயகனாக இப்படத்தில் உலகநாயகன் நடித்து அசத்தப்போவதாகக் கேள்வி. அச்சுறுத்தற்காரனைப் பிடிக்கவரும் காவலாராக மலையாள நாயகன் நடிக்கக்கூடும்.

1நசுருதீன்ஷா

2அனுபம் கேர்

3கமலஹாசன்

4மம்முட்டி


பதிவிறக்கம் செய்ய‌: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/ht.pdf

2 Comments:

Jeyapalan said...

why did Harris Jayaraj not do the music for hindi Gajani? Why did AR accept doing it?

பெயரில்லா said...

நான்கு "ஏ"க்கள் என்று ஒற்றுமைப்படுத்தியது அருமை. ஏ.ஆர்.ரகுமான் என்பது அனைவரும் உபயோகிப்பது வழக்கம்,ஆனால் இயக்குனர் முருகதாஸ் பற்றி அறிய எனக்கு வய்ப்பு இல்லை.பட வெற்றிக்கு இந்த ஒற்றுமை கூட காரணமாக இருக்கலாம்.....