செவ்வாய், 13 ஜனவரி, 2009

இந்தியாவின் சாதனைகள்


நாட்டைப்பற்றி தவறையே சிந்திக்கும் இவ்வேளையில் இந்த நல்ல காரியங்களையும் நினைக்கலாமே!! நேர் ஆற்றலாக இது ஒவ்வொருவோர் உள்ளத்திலும் பாயும் என்பதில் ஐயமில்லை.

கீழ்க்காணும் காரியங்களுக்காக இந்தியா தன் சொக்காயினைத் தூக்கி விட்டுக்கொள்ளலாம்.  

முதலில் நிலவினை ஆராய செயற்கைக்கோள் ஏவியது. நிலவில் நாங்கள்தான் முதலில் நின்றோம். சென்றோம். என்ற கதைகளையும் ஆராய்வது இதன் சிறப்பு. நிலவினைப் படம் பிடித்து அனுப்புவது மட்டுமே இதன் வேலை.  

இரண்டாவது இசைப்புயலுக்கு அயல்நாட்டு விருது கிடைத்தது. இதன் மற்றொரு சிறப்பு என்னவென்றால், எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று மட்டுமே பேசும் புயல் மகிழ்ச்சியுடன் ஆசுகர் விருதினையும் பெற விரும்புவதைச் சொன்னது.

அண்மைய சாதனைப் பட்டியல் குறைவு என்றாலும், நம் நாட்டை நாம் தானே கட்டிக்காக்க வேண்டும்; புகழ வேண்டும். கட்டிக்காப்போம்; புகழ்வோம்.

1 Comment:

பெயரில்லா said...

ஆமாங்க. நல்லத நெனச்சுப்பாக்கவே முடியலைங்க. நல்லதா எதாவது நடந்துச்சான்னு கூகுள்ல தேடிப்பாத்தாலும் கெடைக்கலங்க... நா.. மட்டும் ஒங்க வலைப்பூவ பாக்கறேன் இல்லையா... நல்லது நடக்கும்...