வியாழன், 8 ஜனவரி, 2009

கணினிக்கதை- தன்னம்பிக்கையுடன் வாழ்; கூகுள் செல்லலாம்.


கணினிக்கதை- தன்னம்பிக்கையுடன் வாழ்; கூகுள் செல்லலாம்.

புதிதாய் வாங்கியிருந்த டெல் மடிக்கணினியில் கூகுள் transliterate பயன்படுத்தித் தமிழில் தட்டச்சுச் செய்து கொண்டிருந்தான் பொற்கோ தனது தமிழாய்வுக்கான கோப்புகளை. "என்ன கோ திடீர்ன்னு தமிழ்ல எறங்கீட்டீங்க?" காண்பதற்கினியா அறையின் அமைதியைக் கலைத்தாள். "ஆமா. காண். எனக்கு தமிழ்ல நல்ல ஈடுபாடு. அதுக்காக எறங்கீட்டேன். அதுக்காக கணினித் துறைய விட முடியுமா?" தனது கூகுள் சொக்காயினைச் சரி செய்து கொண்டே மறுமொழி கூறினான் பொற்கோ.

"அப்றம் என்ன‌ நவீனா கல்யாணம் பண்ணி பாஸ்டன்ல செட்டிலாயிட்டா. ஆமா அவ கணவர் விப்ரோல இருக்கதால dependency visaல போயிருக்கா. இன்னும் மூனு மாசத்துல வந்துருவா.”இருவரும் தோழி பற்றி அளவளாவிக் கொண்டனர்.
"கூகுள் பத்தியா! இப்போ தீயா இருக்கு. அதோட தேடுதல் முறைமைகளெல்லாம் அருமையா இருக்கு. ஒவ்வொரு தளத்துக்குள்ளயும் அது புகுந்து தேடற விதம் இருக்கே. பிச்சு எடுத்துட்டாங்க" தனது கருத்துச் செய்திகளுக்குத் தாவினான் பொற்கோ.

தனது தோழனின் கருத்துக்களைக் கேட்க ஆயத்தமானாள் காண்பதற்கினியா தன் கருங்கூந்தலினை வருடியபடி.
"சின்னச்சின்ன நிரல்கள் எழுதப்பட்டு(search robots) அவைகளை தளங்களுக்குள் உலவ விடுகிறார்கள். அவைகளின் வேலை வேறொன்றுமில்லை. என்னென்ன வார்த்தைகள் இருக்கின்றன என பார்த்து அவைகளை பிரித்துப் பிரித்து (எடுத்துக்காட்ட்டாக software engineering எனில் software, engineering என தனித்தனியாக பிரித்து) அவைகளின் தொடர்புடைய தொடுப்புகளை கூகுள் தரவுத்தளத்திற்கு அனுப்புகின்றன. பின்பு தரவுத்தளத்தில் அந்தத் தொடுப்புகள் தரம் பிரிக்கப்பட்டு தரவாரியாக அடுக்கப்படுகின்றன(page ranking) இதற்காக ஆற்றல் வாய்ந்த நிரல்களை கூகுள் தயாரித்து பயன்படுத்துகின்றது. இதனால் தான் எதைத் தட்டச்சு செய்தாலும் உடனே விடை கிடைக்கிறது. கூகுள் சாதாரண பென்டியம் 2, 512எம்.பி ரேம் கொண்ட கணினியைத்தான் பயன்படுத்துகிறது. ஆனால் பழைய யுனிக்ஸ் கிளஸ்டர்கள் அல்காரிதங்களின் மூலம் தேடுதலினை விரைவாக்குகிறது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் யுனிக்ஸ் கிளஸ்டர்கள் வைத்து பயன்படுத்துவது கூகுள்தான்." ஏதோ கருத்தரங்கில் பேசுவது போல பேசினான பொற்கோ.

"சரி.வேறென்ன கூகுள்ல தர்றாங்க கோ." ஆர்வ மிகுதியில் கேட்டாள் காண்பதற்கினியா.
"என்ன இனி இப்டீ கேட்டுட்ட?" வலைப்பூக்கள்ல வர்ற செய்திகளை கூகுள் தளத்துல கொண்டுவர புதிய (crawl) வசதிகளை கொண்டுவந்திருக்கு. இந்த ஊர்வானை நம் தளத்தில் அமைக்க கூகுள் தளத்தில் நம் வலைமனையைச் சேர்க்க வேண்டும். அதுக்கு add my url to google பயன் படுகிறது. இது மூலமா ஒரு ஊர்வான் நம் தளத்தில் மெட்டா டேக் ஆக சேர்க்க வேண்டும். அவ்ளோதான். அப்றம் எல்லாமே அந்த ஊர்வான் பாத்துக்கும். நம்ம தளம் மேம்பட மேம்பட கூகுளிலும் அது சேந்துக்கிட்டே இருக்கும். இந்த ஊர்வான் இருந்துச்சுன்னா நம்ம பக்கம் தான் பேஜ் ரேங்க் மொதல்ல இருக்கும். ஒரு வலைப்பூல குறைந்த பட்சம் 1000 கட்டுரைகளாவது இருக்கணும். ஒவ்வொன்னும் 500 வார்த்தைகளுக்குள்ள இருக்கணும். அப்டீயிருந்தா அந்த வலைப்பூ தேடுதல் வரிசைல மொதல்ல வரும். நான் அது மாதிரிதான் சேத்து வச்சிருக்கேன். நவீனா கூட என்னோட வலைப்பூ பார்த்து குறிப்பெல்லாம் குடுத்திருக்கா", பெருமை பொங்கச் சொன்னான் பொற்கோ.

"ஆகா..!" வியப்பான செய்தி. "அப்றம்.." மேலும் கேட்டது அணங்கு.
"கூகுள்ல‌ அன்றாடம் இரண்டு மணிநேரம் ஓய்வா இருக்கலாம். அப்போ தன்னால அவங்களுக்கு தேவையானச் செய்ய கூகுள் வசதி தர்றது. ஒருத்தர் அப்போ பழைய நண்பர்கள் பத்தி தேட என்ன செய்யறதுன்னு சிந்திச்சார். அவர் வேற யாருமில்ல. நம்ம ஆர்குட்தான். அதுல வந்ததுதான் ஆர்குட். நண்பர்களைத் தேடித் தர்றதுல ஆர்குட் தான் முதலிடம். அதோட பின்செல்பவர்கள் தாம் bigadda.com, wayn.com இவர்கள்." என தளங்கள் பெயர் சொன்னான் பொற்கோ.

"இது மாதிரி பல வந்தும் ஆர்குட் ஆர்குட்தான். எல்லாம் அது தரும் விரைவான சேவைதான். சும்மா இருக்கும் இரண்டு மணிநேரத்தில் ஒருத்தர் தொலைக்காட்சி பார்ப்பாராம். அதுதான் இப்போ யூ-ட்யூப் (youtube.com) ஆக வந்திருக்கு. ஒருத்தருக்கு வேதியியல் மேல கொள்ளை ஆசை. எனவே Google Gadgets Periodic Table தயாரிச்சார். இப்படி எல்லாமே பணிபுரிவோர் எண்ணத்திற்கு விட்டுவிடுவதால், திரைப்பட சுவைஞர்களே (fans, audience) திரைப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் !! அதே மாதிரி எல்லோருக்கும் நிறைவா எல்லாமே வர்றது. (It's really rocking.) "கூகுளைப் புகழ்ந்தான் பொற்கோ.

"மேலாண்மை குறித்துப் பார்த்தால் இது வின் வின் (win-win model) மாதிரியினைப் பயன்படுத்துகிறது. வெற்றி பெறுவது இருமுறைகள். ஒன்று, மற்றவரைத் தோற்க வைத்து இவர் வெற்றியடைவது. மற்றொன்று, மற்றவரை வெற்றி பெற வைத்து இவர் அதன் மூலம் பெரும் வெற்றியடைவது. கூகுள் பயன்படுத்தறது இரண்டாம் முறை.அதன் மூலம் வந்ததுதான் எல்லாமே. google ad-sense, adwords, labs, transliteration, internationalization, news, shopping, calculator, picasa, google gadgets, android எல்லாமே." மூச்சு விடாமல் சொல்லியடங்கினான் பொற்கோ.


"அப்பப்பா!! கேக்கற எனக்கே கூகுள்ல வேல பண்ணனும் போலருக்கு கோ." தலையை ஆட்டி விழிகள் விரியப் பேசினாள் காண்பதற்கியா.

"நீ இப்டி சொல்றீல்ல, அதுதான் அவங்களோட வெற்றி புரியுதா காண். கொஞ்சமா பணியாளர்களை வச்சுக்கிட்டு (10,000)உலகத்தையே கலக்கறது இவங்கதான். அதுனாலத்தான் எல்லா பணியாளர்களையும் நிறைவு (satisfy)செய்ய முடியறது. ஏற்கனவே பல நிறுவனங்கள் இதனால‌ ஆட்டம் கண்டிருக்கறது. இப்படியே போனால் வேறெந்த நிறுவனமும் நெருங்க முடியாத அளவுக்கு இது சென்று விடும். பீட்டா பைட் சர்வர் இவர்களது. கூகுள் வரைபடங் கொண்டு earth, mars, moon என எல்லா பக்கமும் தேடலாம். என்னோட கனவே இங்க வேலை பாக்கணுங்கறதுதான் இனி." சற்றே உணர்ச்சி பொங்கக்கூறினான் பொற்கோ. "சரி. நம்ம ரெண்டு பேருமா சேந்து அந்த வேலயத் தேடலாம்." காண்பதற்கினியா தன்னம்பிக்கையுடன் பேசினாள் பொற்கோவின் கரம் பற்றி. "பெங்களூர்ல இந்த அலுவலக ஏதோ ஒரு சின்ன நிறுவனம் போல உண்டு. நான் இந்த பணியாட்கள் கிட்ட பேசிருக்கேன் இனி. 'பாத்தா சின்ன நிறுவனம் போலத்தான் இருக்கும். ஆனா நீங்க கூகுள்ல வேல பண்ணிக்கிட்டிருப்பீங்க.' அப்டீன்னு சொல்வாங்க." தான் கேட்டதைச் சொன்னான் மென் பொறிஞன் பொற்கோ.

"ஆனா இங்க வேலக்குச் சேர்ற‌து சாதாரணமில்ல. மொதல்ல இந்த நிறுவனத்துல சேர்றது பத்து காரணம் கேப்பாங்க. அத சரியா சொன்னா போதும். நம்ம தகுதிகாண் படிவம் தேவை. வேற சமயம், இனம், எல்லாம் தேவயில்ல. லினக்ஸ் மேலாண்மை(Linux Administration) நல்லா தெரியணும். ஸ்கிரிப்ட்ங் எல்லாம் அத்துப்படியா இருக்கணும். அப்பத்தான் இங்க நொழய முடியும். நொழயற வரைக்குந்தான் தொல்ல, அதுக்கப்பறம் எல்லாரும் நல்லா நட்பா இருப்பாங்க. நாமளும் பிச்சு எடுக்கலாம்." அடுத்து போனா கூகுள் தான் என்கிற சமிக்ஞையில் பேசினான் பொற்கோ.

"என்ன செய்யறது கோ? எனக்கு ஸ்கிரிப்டிங் நிரலெல்லாம் தெரியாது." கவலையுடன் பார்த்தாள் காண்பதற்கினியா. "நா சொல்லித்தர்றேன் இனி.." என்றவன் "தன்னம்பிக்கையுடன் வாழ்; கூகுள் செல்லலாம். தன்னம்பிக்கையுடன் வாழ்; கூகுள் செல்லலாம்." என்று தானாகவே இட்டுக்கட்டிய மெட்டில் பாடினான் தனது இலச்சினைப் புன்னகையுடன் (branded smile).
"இப்படியே போய்க்கிட்டிருந்துச்சுன்னா வரலாறு, புவியியல் போன்று கூகுள் என்று பள்ளியில் தொடக்க கல்வியிலேயே ஒரு பாடம் வைக்க வேண்டியதுதான்." ஏதோ கல்வியமைச்சர் போல் மனதில் நினைத்தாள் காண்பதற்கினியா. நினைத்தவள் அருகிலிருந்த கற்றையில் ஒரு தாளினை உருவினாள். இலினக்சு (Linux shell scripts) குறு நிரல்களைப் படிக்க.

"இப்போ நம்ம ஒரு சின்ன கால்குலேட்டருக்கான நிரலைப் பாக்கலாம்." கற்றைத்தாளை வாங்கி கடகடவென எழுதத் தொடங்கினான் பொற்கோ.

#!/bin/bash

# Shell Program to simulate a simple calculator

# -------------------------------------------------------------------------

a=$1

op="$2"

b=$3

if [ $# -lt 3 ]

then

echo "$0 num1 opr num2"

echo "opr can be +, -, / , x"

exit 1

fi

case "$op" in

+) echo $(( $a + $b ));;

-) echo $(( $a - $b ));;

/) echo $(( $a / $b ));;

x) echo $(( $a * $b ));;

*) echo "Error ";;

esac


"இந்த நிரல் எளிமையா எல்லாருக்கும் புரியும்படி அமைஞ்சிருக்கு. இதுல இரண்டு எண்கள உள்ளீடு செஞ்சு அதுக்கேத்த மாதிரி வெளியீடுகளப் பெறலாம். இதில் வரும் ஆப்பரேட்டர் மட்டும் ஸ்ட்ரிங்கா நம்ம ரீட் பண்றோம். அதுக்காகத்தான் இதுல ("op") அப்டீன்னு டிக்ளேர் பண்ணியிருக்கோம். இது ஒரு சின்ன ஸ்கிரிப்ட்தான். இது மாதிரி நெறய ஸ்கிரிப்ட்டுக்கள் இருக்கு. அதெல்லாம் படிச்சா ஒடனே கூகுள்ல வேலைக்குப் போகலாம். என்ன?" அறிவாய்ப் பேசினான் பொற்கோ.

http://www.freeos.com/guides/lsst/

http://www.hsrl.rutgers.edu/ug/shell_help.html

http://linuxcommand.gds.tuwien.ac.at/writing_shell_scripts.php

http://www.cit.gu.edu.au/~anthony/info/shell/

"தளங்கள்ல எப்டீ ஷெல் ஸ்கிரிப்ட் எழுதறதுன்னு விளக்கமெல்லாம் இருக்கு காண்.“

"தன்னம்பிக்கையுடன் வாழ்; கூகுள் செல்லலாம்..."இப்போது காண்பதற்கினியா பாடினாள்.

பதிவிறக்கிப்படிக்க‌: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/live-in-confidence-for-google.pdf

4 Comments:

கடவுளன் said...

ஒரு கதைக்குள்ளேயே இவ்வளவு கருத்துக்களைச் சொன்னது அருமை. அதுவும் தொழிற்நுட்பச் செய்திகளைச் சொன்னது மிகவும் அருமை. காண்பதற்கினியா, பொற்கோ நேரில் வந்ததுபோலிருந்தது. நல்ல பதிவு.

Thooya said...

Realy nice story. I came to know about the service of google and moreover all the technical terms in tamil was nice.

Thooya said...

The way of story formation was good .people will gain interest to read matter.

P N A Prasanna said...

கருத்துக்களுக்கு நன்றி தமிழில் தட்டச்சு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.