சனி, 17 ஜனவரி, 2009

கமல் எஸ்.பிபியை ஒதுக்குகிறாரா?

கமல் எஸ்.பி.பி கூட்டணி சேர்ந்தால் வெற்றி மயம்தான். அப்படியிருந்தும் எஸ்.பி.பியினை கமல் விலக்குகிறாராம். இது நான் சும்மா வலைப்பூ உலாவும் போழுதுதான் எஸ்.பி.பி சுவைஞனான என்னாலேயே உணரப்பட்டது. இதற்கு கமல் பக்கம் தான் விடை வரவேண்டும். கமல் விடை பகர்வாரா பார்க்கலாம்.

எஸ்.பி.பி கமலுக்கு இறுதியாகப்பாடியது "தெனாலி" படத்தில் தான். "சுவாசமே..” பாடலில் தலைவர் எஸ்.பி.பி கிழித்தெடுத்திருப்பார். படமும் வெற்றிதான். இந்தப்படம் வந்து ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன.

அதற்குப்பிறகு வித்யாசாகர் இசையில் அன்பேசிவம் படத்தில் "மௌனமே பார்வையாய்...” பாடல் எஸ்.பி.பி, சாதனா சர்கம் பாடியிருந்தனர். ஆனால் அப்பாடல் படத்தில் வரவில்லை. "பூவாசம் புறப்படும்...” வந்து காதை வருடியது. ஆனால் குறுவட்டில் இப்பாடல் இருக்கிறது. அதை ஏன் படமாக்கவில்லை. கமல் பக்கம் மௌனமே பார்வையாய் இருக்கிறது.
எல்லாவற்றிலும் உண்மையை மட்டுமே பேசும் கமல் இதில் மௌனமாயிருப்பது கமல் மற்றும் எஸ்.பி.பி சுவைஞர்களுக்கு கவலையளிக்கிறது. இப்பொழுது கமலுக்குப் பாடும் யாரின் குரலும் அவருக்குப் பொருந்தவில்லை. அவர் பாடுகிறார் என்றாலும், ஒன்று அல்லது இரண்டுதான் பாடுகிறார். ஏன் அவர் எஸ்.பி.பிஐ ஒதுக்குகிறார். விடைகிட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
எல்லோருக்கும் இனிய‌ எஸ்.பி.பிஐ ஒதுக்கினால் இழப்பு கமலுக்குத்தான் என்பது திண்ணம்.


பதிவிறக்கம் செய்ய‌: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/kamalspb.pdf

6 Comments:

பெயரில்லா said...

//எல்லாவற்றிலும் உண்மையை மட்டுமே பேசும் கமல் இதில் மௌனமாயிருப்பது கமல் மற்றும் எஸ்.பி.பி சுவைஞர்களுக்கு கவலையளிக்கிறது. இப்பொழுது கமலுக்குப் பாடும் யாரின் குரலும் அவருக்குப் பொருந்தவில்லை. அவர் பாடுகிறார் என்றாலும், ஒன்று அல்லது இரண்டுதான் பாடுகிறார். ஏன் அவர் எஸ்.பி.பிஐ ஒதுக்குகிறார். விடைகிட்டுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
எல்லோருக்கும் இனிய‌ எஸ்.பி.பிஐ ஒதுக்கினால் இழப்பு கமலுக்குத்தான் என்பது திண்ணம். //

ப்ரசன்ன்னா அவர்களே..

ரொம்ப சரியா சொன்னீங்க நீங்க வருத்தப்பட்ட சேதிகள் என்னைப்போன்ற பாலுஜி அபிமானிகளூக்கும் ரொம்பவும் வருத்தம் தான். இதைப்பற்றி அதிகம் எங்கள் பா.நி.பா தளத்தில் கூட விவாதித்திருக்கிறோம், இருந்தாலும் அப்படி எந்த பிரசச்னையும் இருக்ககூடாது என்று தான் நாங்களூம் விரும்புகிறோம். சென்ற வருடம் கோவையில் பாலுஜி தன் ரசிகர்களூடன் ஒரு சந்திப்பில் தசாவாதாரம் தெலுங்கு டப்பிங் செய்கிறேன் என்று சொன்னது எனக்கு நினைவு. இருந்தாலும் தமிழில் பாடல்கள் வழங்காது நீங்க சொன்னபடி அவருக்கு தான் நஷ்டம். ஒட்டு மொத்த பாலுஜி ரசிகர்களின் உணர்வை மீண்டும் பிரதிபலித்த உங்கள் உணர்வுகளுக்கு கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி.

PNA Prasanna said...

நன்றி தெரிவித்த இரவி அவர்களுக்கு நன்றி. விரைவில் என் மானசீக குருவான எஸ்.பி.பி கமலுக்கு பாடுவார் என்ற நினைப்புடன் அன்பன் பிரசன்னா

பெயரில்லா said...

இப்படி ஒரு கருத்து இருப்பதே இதில் படித்துத்தான் தெரிந்துக்கொண்டேன்.

பெயரில்லா said...

It is not surprising at all. Kamal is known for ditching people in his personal as well as his professional life.

Unknown said...

This news cannot be true and I dont
feel they are in bad terms as the
program "Kalakka povadhu yaaru" aired
on SUN tv (not the stand up comedy
reality show, I guess this was before
that) dedicated to Kamal where
various industry people talk about
music (Janaki, K.S.Ravikumar etc)
had SPB in it too and plays an
important part in the discussion.
This program was aired just before
or just after the release of Vasool
Raja MBBS and it is available in
DVD stores too. Very nice program
showing Kamal and SPB face to face
having some very interesting interactions. Please check it out.

பெயரில்லா said...

Last year Kamal came for the 100th day function of "Chennai-28" on the invitation of Balu..