செவ்வாய், 27 ஜனவரி, 2009

திருட்டுக்குறுவட்டிற்குக்கூட தகுதியில்லாத வில்லு


பழங்காலத்து பழிவாங்கும் கதையினை குதறி எடுத்திருக்கிறார் நாயகன்1. திருட்டுக்குறுவட்டிற்குக்கூட தகுதியில்லாத இப்படத்திற்கு ஒரு திறனாய்வு தேவையா என்ற கேள்வி எனக்கே எழுகின்றது. இருப்பினும் என்ன செய்ய மனக்குமுறல்களைக் கொட்ட. இசையமைப்பாளர்2 நன்கு இசைபழகிக் கொண்டிருக்கிறார். இது போன்ற படங்களை சுவைஞர்கள் கொண்டாடினால் தமிழ்நாட்டினை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. இனிமேலாவது நல்ல படங்களில் நாயகன் என்றழைக்கப்படுபவர் நடிக்க இறைவனை இக்கட்டுரை வாயிலாக இறைஞ்சுகின்றோம்.  படம் பார்க்க யாரும் திரையரங்கம் பக்கம் செல்ல வேண்டாம்.

1Vijay

2Devi sri prasad

2 Comments:

பெயரில்லா said...

//இசையமைப்பாளர்2 நன்கு இசைபழகிக் கொண்டிருக்கிறார். இது போன்ற படங்களை சுவைஞர்கள் கொண்டாடினால் தமிழ்நாட்டினை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. //
இதெல்லாம் உண்மைதாங்க நானும் படம் பாத்துட்டு அழுவாத கொறயா இருக்கேனுங்க.

பெயரில்லா said...

ஏண்ணே இதுக்கெல்லாம் திறனாய்வு எழுதி நேரத்த வீணக்குறீங்க. அவனே ஒரு வீணாப்போனவன்.