சனி, 3 ஜனவரி, 2009

உலகநாயகனும்1 மேல்நாட்டு நடிகர் ரோவன் அட்கின்சனும் - ஓர் ஒப்பீடு

உலகநாயகனும்1 மேல்நாட்டு நடிகர் ரோவன் அட்கின்சனும் - ஓர் ஒப்பீடு

மிஸ்டர் பீன்ஸ்2 என்னும் தொடரினைப் பார்க்காத சிறுவர்கள் ஏன் பெரியவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு மேல்நாட்டு நடிகர் நடிப்பில் பிளந்து கட்டுவார்.

என்னதான் நாம் உலகநாயகனின் நடிப்பினை தலையில் தூக்கி வைத்து ஆடினாலும், மேல்நாட்டு நடிகரின் நகைச்சுவை நடிப்பினைப் பார்க்கும் பொழுது அவர் நமது உலகநாயகனை மிஞ்சி விட்டாரென்றே தோன்றுகிறது.

இவருக்கும் சுவைஞர் பட்டாளம் உலகமெங்கும் நிரம்ப இருக்கின்றது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் இவரது நடிப்பிற்கு அடிமைகள். இவர் எடுக்கும் முயற்சிகள் சற்றே கடினமானவைகள்தாம். படத்தில் பேசாமல் சிரிக்க வைப்பது .முகநடிப்பினை நன்கு வெளிக்காட்டுவது போன்றவை மொழி புரியாதோரையும் அண்மைப் படுத்திவிடும்.

இவரது தொடர்களில் வரும் இசையும் வேறுபட்ட ஒரு இசையாக இருக்கும். குறைந்த முதலீட்டில் இவர் நடித்த படங்கள் உலகமுழுதும் நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றன.

நமது கலைஞானியும்3 ஒரு படத்தில்4 பேசாமல் நடித்திருந்தார். அந்தப்படம் வந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. புன்னகை மன்னனில் நகைச்சுவை மன்னன் போல் நடித்திருந்தாரேயொழிய அதில் அவர் பேசியே நடிப்பார்.

வாழும் வரலாறு5 பல்வேறு பாத்திரங்களில் பாத்திரப்படைப்புணர்ந்து நடிப்பார். ஆனால் மேல்நாட்டு நடிகர் நகைச்சுவையாக மட்டுமே நடிப்பார்.

எது எப்படியோ, உலகநாயகன் இன்னும் மேல்நாட்டு நடிகரிடமிருந்து நகைச்சுவையினைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றே தோன்றுகிறது. இவரது நகைச்சுவை வேறு. அவரது வேறு. அவரது களம் வேறு. இவர் களம் வேறு.

இது போன்றிருக்கும் நடிகர்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவார் நம்மவர். முடியாவிடில் இசைவட்டு விழாவிற்கேனும் அழைப்பார். மேல்நாட்டு அரசி6, சீன நடிகர்7 என்று பலர் வந்து நம்மவர் இசைவட்டினை வெளியிட்டது நிறைய நினைவிலிருக்கலாம்.

அது போல மேல்நாட்டு நடிகரையும் இவர் பயன்படுத்துவாரா? பொறுத்திருந்து பார்ப்போம். மேல்நாட்டு நடிகர் நடிப்பது மட்டுமின்றி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், இயக்குனராகவும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் உலகநாயகத்தின் ஒரு பழக்கமே. எது எப்படியோ உலகநாயகனும், மேல்நாட்டு நகைச்சுவை நடிகரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் தானே தெரியும் யார் சிறப்பு என்பது.
இது போல் நடித்து உலகநாயகனை ஒத்துக்கொண்டவர்கள் ஷாரூக்கான்
, மாதவன், அர்ஜீன், பிரபு, பிரபுதேவா மற்றும் பலர். மின்னல் வேக சண்டையினை நகைச்சுவையுடனே போடும் சீன நடிகர் இணைந்து நடிக்க இயலாததால் அவர் அண்மைய உலகநாயகத்தின் படத்தின்8 பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1Kamal hasan

2A series of comedy

3Kamal hasan

4 பேசும் படம்

5Kamal hasan

6Queen Elizabeth

7Jackie Chan

8 தசாவதாரம்

பதிவிறக்க: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/ulaganayagan.pdf

4 Comments:

பெயரில்லா said...

vanakkam prasanna
thangal valai poo miga nanraaha ullathu
ungal thamizh thondu menmelum valara vaazhthukkal..

PNA Prasanna said...

எங்கள் தமிழ்த் தொண்டைப் பாராட்டிய நண்பர் அஜித்துக்கு நன்றி.

பெயரில்லா said...

ஒலக நாயகன் ஒத்துக்குவரப்பா இதுக்கெல்லாம்?
ம்ம் பாக்கலாம்

PNA Prasanna said...

உலக நாயகன் ஒத்துக்கொண்டு நமக்கெல்லாம் விருந்தளிக்க வேண்டுமென்பதே ஒட்டுமொத்த கலை உலகத்தின் விருப்பம்.