சனி, 3 ஜனவரி, 2009

ஏகன் மற்றும் சேவல் திறனாய்வு

ஏகன்:

ஏகன்1 எதற்கு இப்படி படத்திற்கு பெயர் வைத்தார்கள் என்று என் மனைவி கேள்வி. அஜித் கையில் ஒரு துப்பாக்கி வைத்திருக்கிறார். அது ஏக் கன் அதான் ஏகன் என்றேன். கொல்லென்ற சிரிப்பை அடக்க வெகுநேரம் பிடித்தது படம் பார்க்கையில்.

நாமும் இப்படித்தான் படத்தில் சிரித்துக் கொண்டேயிருக்கிறோம். ஏன்? படம் அப்டீ எடுத்துருக்காங்கப்பா.ம்ம்.. ஏதோ ஒரு வடமொழிப்படத்தினை2 மறு ஆக்கம் செய்தார்களாம்.

தல நடிகர் அவரை அவரே கேவலப் படுத்திக்கொண்டிருக்கிறார். எடுத்துக்காட்டுகள் உன்னைப்பார்த்தபின்பு3 பாடலைப் பாடி கெடுக்கிறார். முந்தைய படத்தில் அவர் பேசியதை4 அவரே இழிவாகச் செய்கிறார்.

"என்ன ஆச்சு தல ஒங்களுக்கு?"

குண்டான உடலமைப்பு ஆடுதலுக்குத் தடையாக இருக்கிறது. நவ்தீப் அவருக்குப் மாற்றாக‌ ஆடுகிறார். ம்ம்... நயன் தாரா ஒரே மாதிரியான நடிப்பினைத் தருகிறார். இராசு சுந்தரம் இயக்குனராம். இன்னும் நன்றாகக் கற்றுக் கொண்டு இயக்கலாமே இராசு..
.. அப்பா. இந்தப் படத்துக்கெல்லாம் இவ்வளவுதான் திறனாய்வு எழுத முடியும்.


சேவல்

இயக்குனர் அரியின்5 படம். திருநெல்வேலி வட்டார வழக்கு படம் நெடுக இழையோடுகிறது. நன்று. ஒளிக்கருவி நன்றாக வேலை செய்திருக்கிறது. கதை. பழையது தான். முன்பு நடந்ததை நினைத்துப் பார்க்கிறார் நாயகன்6. நல்ல உணர்ச்சி தொடும் முயற்சி. அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

கைம்பெண் மறுமணம், நாயகனின் தியாகம், நாயகியின் தியாகம், படித்தவுடன் கிழித்து விடவும் நகைச்சுவை தலையளவு மண்ணில் இருக்கும் நாயகன் பந்தயம் ஓரளவு சுவை தருகிறது.

பெண்ணின் தலையை மொட்டையடிப்பது. இறுதியில் நாயகிக்கே அது நிகழ்வது. எதிர் நாயகன் காமம் சொட்டச் சொட்ட பெண்களைப் பார்ப்பது. கெட்டவார்த்தைகள் தணிக்கை குழுவினரால் தணிக்கை செய்யப்பட்ட போதும். சுவைஞர்களால் அது உணரப்படும் வண்ணம் இருப்பது எல்லாமே தமிழ்த் திரையின் சாபக்கேடுகள். சிம்ரன், நாயகன், வடிவேலு நகைச்சுவைகள், ஆறுதல் தருபவை. நல்ல உணர்ச்சிக்களஞ்சியமாக7 எடுத்திருக்கிறார்கள். பெண்களை அழ வைக்க எடுக்கப்பட்ட படம். வன்முறையும் இருக்கிறது. இசையமைப்பாளர்8 இரகுமானின் அக்கா பையனாம். நன்றாக இசை பழகிக் கொண்டிருக்கிறார். "துளசி செடிய அரளிப்பூவு..." பாடல் பரவாயில்லை. மற்ற எல்லாம் ப்பூ.. சிற்றூர் மக்களை இந்த சேவல் கவரும்.

1தனியாள், ஒருவன் என்று பொருள். - .. நான் தனியாள் இல்ல.. என்பவர் நடித்திருக்கும் படம்..ம் சிரிங்கப்பா.

2Hindi film

3காதல் மன்னன் படத்தில் வரும் இப்பாடல் அருமையானது. அனைவராலும் சுவைக்கப்பட்டது. அது இப்படத்தில் கூத்தாக்கப்பட்டிருக்கிறாது அவராலேயே.

4பில்லா படத்தில் I'm backஎன்கிற உரையாடல்

5Hari

6பரத்

7Sentimental

8GV Prakash kumar

பதிவிறக்கம் செய்ய‌: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/aeganseval1.pdf

0 Comments: