குறில்,நெடில்:
குறுகி ஒலிக்கக்கூடியவை குறில்கள் என்றும், நீண்டு ஒலிக்கக்கூடியவை நெடில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இதைக் குற்றொலிகள், நெட்டொலிகள் என்றும் அழைப்பர். குற்றொலிகள் ஒலிக்கும் அளவு ஒரு மாத்திரை எனவும், நெட்டொலிகள் ஒலிக்கும் அளவு இரண்டு மாத்திரை எனவும், ஒற்றெழுத்துக்கள் ஒலிப்பது அரை மாத்திரை எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
அ,இ,உ,எ,ஒ குறில்கள் ஆ,ஈ,ஊ,ஏ,ஓ,ஐ,ஒள நெடில்கள் ஆகும். க்+அ=க குறிலாகும். க்+ஆ=கா நெடிலாகும்.
அடி:
செய்யுளில் அடி என்பது வரி என்பதைக் குறிப்பிடுவதாகும். எடுத்துக்காட்டு: திருக்குறளில் இரண்டு அடிகள் உள்ளன. ஈற்றடியில் ஈற்றுச்சீர் இல்லை.
எதுகை,மோனைகள் ஒலிச்சிறப்புக்காக செய்யுளில் அமைக்கப்படுகின்றன.
மோனை: அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வர அமைவது மோனையாகும்.
எ.கா:
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
இதில் அடிதோறும் "தோ" எழுத்து ஒன்றி வருவதால் மோனையாகிறது. "ஏஇமோமு" என நினைவில் வைத்துக்கொள்வது மரபு. அதாவது எதுகை இரண்டாமெழுத்து;முதலெழுத்து அளவொத்து நிற்க வேண்டியது இன்றியமையாதது. மோனை முதலெழுத்து.
எதுகை: அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றி வர அமைவது எதுகை எனப்படும்.
எ.கா:
பணியுமாம் என்றும் சிறுமை பெருமை
அணியுமாம் தன்னை வியந்து.
இதில் "பணியுமாம்" என்பது "அணியுமாம்" க்கு எதுகையாகிறது. ஏனெனில் அடிதோறும் முதலெழுத்து அளவொத்து குறிலாக இருக்கிறது.
தளை, தொடை போன்றவற்றை பின்னர் காணலாம்.
ஒருமை பன்மை:
ஒருமையில் பெரும்பாலும் "கள்" சேர்த்தாலே பன்மை வரும்.
எடுத்துக்காட்டுகள் பல
ஆடு: ஆடுகள்
மாடு: மாடுகள்
புலி: புலிகள்
எக்காளம்: எக்காளங்கள்
பன்மை இல்லாதவை: இயற்கை, கடவுள் போன்ற பொதுப்படையான சொற்களுக்கு பன்மைகள் இல்லையெனினும், அவை ஒருமையாகவோ அல்லது படர்க்கையில் ஒருமையாகவோ கருதப்பட்டால் அதற்கும் "கள்" சேர்த்து பன்மையாக எழுதும் வழக்கம் தமிழில் உண்டு. இவை பெயர்ச்சொற்களுக்கும் பொருந்தும். இருப்பினும், தமிழ்க்கற்றுக் கொள்ளும் தொடக்கநிலையாளர்கள் இப்படி எழுதுவதைத் தவிர்த்தல் நலம் பயக்கும்.
வேறுபட்ட பன்மைகள்:
பல - பற்பல
சில - சிற்சில
0 Comments:
Post a Comment