கணினிச்சொல் அகரமுதலிக்கான முதல்கட்ட ஆயத்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறேன். இதில் சில உறுப்புக்களை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு முழு உரிமையும் தந்திருக்கிறேன். நீங்கள் இதைச் சரிவரப்பயன்படுத்தி தமிழ்ச்சொற்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குத் தாரீரோ.
இதில் ஏழு உறுப்புகள் உள்ளன. முதலில் ஆங்கிலச்சொல். இரண்டாவது இணையான தமிழ்ச்சொல். மூன்றாவது தமிழ் போன்ற சொல். அதாவது சில சொற்கள் காலத்தால் தமிழில் கலந்து விட்டன. அவையெல்லாம் தமிழ் ஆகாது. வடமொழி இன்னபிற சொற்களையும் இதில் எழுதலாம்.
நான்கில் ஆங்கில விளக்கமும், ஐந்தில் தமிழ் விளக்கமும் சரியாக இருந்தால் பத்திகளில் கொடுக்கலாம். ஆறில் வலைமனைகள் ஏதேனும் தொடர்புடையதாக இருப்பின் அதைத் தரவேண்டும். ஏழாவது ஏதேனும் குறிப்பிட்ட சொல் தொடர்பாக ஆராய்ச்சிகள் அல்லது இன்னும் ஏதேனும் இருப்பின் அதைத் தெரிவித்தல் சிறப்பு.
பின்பு குறித்த கோப்பினை சேமிக்க வேண்டும். முழு உரிமை தந்தது புதிய சொற்களை பல்வேறு நாடுகளிலிருந்து தமிழுக்குக் கொடுப்பதற்கே. வேறு ஏதேனும் சீர் கேட்டுக்கன்று. எனவே கோப்பினைச் சரிவர பயன்படுத்தி தமிழ்ப்பெய்ய வேண்டுகிறேன்.
இந்தத் திட்டத்தில் எல்லாரும் ஒரு உறுப்பாகச் செயற்பட வேண்டும். இது ஒரு கூட்டுமுயற்சியே. இணையத் தமிழர்களே தமிழுக்குள் மின்சாரம் பாய்ச்ச ஆயத்தமா? சொற்கள் சரிவரச் சேர்ந்த பின் முழு அகரமுதலியானது வெளியிட்டு உலகால் அங்கீகரிக்கப்படும் நாள் அண்மையில் உள்ளது என்கிற கனவோடு...
பெருங்கோன் பா.நி.ஆ. பிரசன்னா.
1.கணினித்துறையல்லாத வேறு சொற்களை எழுத வேண்டாம்.
2. எழுதி விட்டு கண்டிப்பாகச் சேமிக்கவும். உங்கள் பதிவு சரிவர இருந்தால் அது அகரமுதலியில் சேர்க்கப்படும்.
3. சொல்லுக்கான சான்றுகள், உங்கள் பெயர் விவரங்களை விரும்பினால் பதிவில் சேர்க்கலாம்.
அகரமுதலி வெள்ளோட்டப்பதிப்பினைக்காண கீழே சொடுக்கவும்.
http://spreadsheets.google.com/ccc?key=p_tGs8BDc0isXR3lFomIPGg
3 Comments:
உறுதியாக இத்திட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு உங்கள் பெருங்கோன்
இந்த இணைப்பைப் பார்க்கவும்
நண்பர் திகழ்மிளிருக்கு நன்றிகள். தங்கள் இணைப்பில் தமிழ்க்கண்டு மகிழ்ந்தோம். உங்களது கருத்துக்களும் எம் அகரமுதலித் தொகுப்பில் விரைவில் தமிழ்பெயது பதியப்படும்.
Post a Comment