சனி, 24 ஜனவரி, 2009

கஜினி எப்படித் தயாரித்தார்கள்?


வல்லரசு1 நாட்டிலிருந்து நண்பர் செயபால் கஜினியில் ஏன் இரஃமான் என்று கேட்டிருந்தார். அவருக்கு விடையளிக்க எத்தனித்ததில் பிறந்தது இக்கட்டுரை. பல்லடுக்கு உயர் திரையரங்கில்2 திரைப்பட இடைவேளையில் இலவசமாகக் கிடைத்த குறுபனுவலினை3 எம்மிளவல் வார விடுமுறைக்கு வந்திருந்த பொழுது கொடுத்திருந்தார். அதைப் படித்து அறிந்ததை என் நடையில் தமிழ்ப்பெய்து தருகிறேன் அன்பு வாசகாள்.

படத்தொடக்கம்:

இரண்டாண்டுகளாக படப்பிடிப்பு நடத்தியது அனைவரும் அறிந்த ஒன்றே. முதலில் தமிழ்ப்பதிப்பான குறித்த படத்தின் எதிர் நாயகன்4 இப்படத்தின் நாயகனைப்5 பார்க்க வைத்திருக்கிறார். எதிர் நாயகன், நாயகனின் சில படங்களில்6 நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு இயக்குனர்7 வடமொழி நாயகன் சந்திப்பு. பின்பு கதையின் உச்சகாட்சியில்8 மாற்றங்கள். தமிழில் செய்த தவறுகளின் திருத்தங்கள் என எல்லாம் நடைபெற்றது. வடமொழி பதிப்பு ஏறத்தாழ சரியாக வந்ததில் இயக்குனருக்கு மிகவும் மகிழ்ச்சி.

ஏன் இரஃமான்?

இரஃமானின் சந்தை ஏற்கனவே வடக்கே கோலோச்சுகின்றது. அதோடு பழைய கதைக்கு புது மெட்டுக்களையும் வாங்கி விடலாம் என்ற இயக்குனரின் எண்ணமே காரணம். அதோடு தனது படங்களின் இசையமைப்பாளர்களை மாற்றிக் கொண்டே இருப்பது அவரது நடைமுறை9.
தமிழில் பிழைகள், வடமொழியில் கலைகள்:

தமிழில் நாயகன் குத்தியிருக்கும் பச்சை நேராக இருக்கும். வடமொழியில் இது இடவலமாக10 மாற்றியிருக்கிறார்கள். அப்போதுதான் கண்ணாடியில் நேராகத் தெரியும். மேலும் அதிலுள்ள தொலைபேசி எண்கள் அனைத்தும் உண்மையானவையே. தமிழில் உச்சகாட்சியில் இரண்டு எதிர்நாயகர்கள் வருவார்கள். இருவரையும் பிழையற கொல்வார் நாயகன் எதையும் மறக்காமல். ஆனால் வடமொழியில் நாயகன் கடைசியிலும் மறந்து விடுகிறார் என்று மாற்றியிருக்கிறார்கள்.

ஏன் ஆமீர்?

கதைக்காக நாயகன் முதலில் வேறு நடிகர்கள்11 பெயர்களைப் பரிந்துரைத்திருக்கிறார். ஆனால் அவர்கள் செய்தால் அது பழைமை. நீங்கள் செய்தால் அது புதுமை என குறிப்பிட்ட நாயகனையே நடிக்க வைத்தது இயக்குனரின் சிறப்பு.
பாடல்காட்சி:

வடமொழியில் குறித்த பாடல்12 காட்சியினை கடினப்பட்டு படமாக்கியிருக்கிறார்கள். ஒரு பாடலினை தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பாடகர்13 பாடியிருக்கிறார். அது வெற்றியும் அடைந்து விட்டது. வடக்கே இருந்து வரும் பாடகர்கள்14 தமிழ் பாடல்களைக் கொலை செய்து கொண்டிருக்க, நம்மவர் அங்கு புகழ் பெற்றிருப்பது "தெற்கு கோலோச்சுகிறது; வடக்கு கும்பிடுகிறது.” என்னும் புதுமொழிக்கு வழிவகுக்கிறது.


நாயகனின் உடற்கட்டு:

மற்றொரு நாயகனின்15 உடற்கட்டமைப்பாளரான16 ஒருவரே நாயகனுக்கு உடற்கட்டு செய்ய உதவியிருக்கிறார். பதிமூன்று திங்கள்கள் கடும் உழைப்பு, அதற்கேற்ற சாப்பாடு என உடற்கட்டு உருவெடுத்திருக்கிறது.

தெற்கேயிருந்து சென்றவரான ஒரு துணைநடிகர்17 இப்படத்தில் ஒரு காவலராக வருகிறார். தமிழிலும் இவரே செய்திருந்தார். இவரின் உடற்கட்டும் குறிப்பிடத்தக்கதே.

அடுத்த படம் யாருக்கு?

நினைத்தால் கூட அடுத்த படம் தமிழில் செய்ய முடியாத அளவுக்கு வடமொழி வாய்ப்புகளில் தத்தளிக்கிறாராம்இயக்குனர். அடுத்ததாக ஒரு உச்ச வடநாயகன்18 படம் செய்வதாகக் கேள்வி.
நாயகியின்19 கதையும் அதுதான் என்றாலும், வேறு படத்தை ஒப்புக்கொள்ளக்கூடாது என தற்காலிக அன்புக்கட்டளை விடுத்துள்ளாராம் வடமொழி மறதி பட நாயகன்.
பதிவிறக்கம் செய்ய‌: http://pnaprasanna.blog.co.in/files/2009/01/kajni.pdf

1Canada

2Innovative Multiplex

3Hand book – The making of Gajni

4Pradeep Shawant

5Aamir Khan

6 சர்ஃபரோஷ், லகான்

7 .ஆர்.முருகதாஸ்

8climax

9 தீனா - யுவன் சங்கர் இராஜா, ரமணா - இளையராஜா, கஜினி - ஹாரிஸ் ஜெயராஜ்

10Mirror image

11Salman Khan, Hrithik Roshan

12Ghuzarish

13Karthik

14Udit Narayan, Adnan Sami

15Hrithik Roshan

16Satyajit Chourasia

17Riyaz Khan

18Shah Rukh Khan

19Asin

3 Comments:

பெயரில்லா said...

தமிழில் பிழைகள்; வடமொழியில் கலைகள்.

தெற்கு கோலோச்சுகிறது; வடக்கு கும்பிடுகிறது. போன்ற சொற்றொடர்கள் அருமை அண்ணே.

பெயரில்லா said...

நல்ல தமிழாக்கம். தொடர்ந்து செய்க அன்ப...

PNA Prasanna said...

கருத்து கூறிய நண்பர்களுக்கு நன்றி